Home

Kanzen Chemistry Campus

Molecule of the Week

Molecule of the Month

Book for All

Prakriti or Muppini

APJ Abdul Kalam

ALBERT EINSTEIN

Saint

Buddhism

BMI

Talks

Name Reactions

LMES

Free Online Courses

My Postdoc Mentor

My PhD Mentor

PhD

MPharmacy

BPharmacy

Renowned Research Institute

My Research Profile

Obesity

Diabetes

Infectious Diseases

Cell Signaling Pathway

Siddha Institute

Siddha Vidhyarthi

Siddhars Padalgal

Great Personalities

Search Engine

FOLLOWING

Sunday, May 22, 2016

முடக்கத்தான் கீரை


முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். மழை காலங்களில் மட்டுமே கிடைக்கும் கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் எல்லோருடைய வீட்டு கொல்லைப் புறங்களிலும் இது படர்ந்து கிடக்கும்.

கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதனால் இக்கீரைக்கு முடக்கு + அற்றான் = முடக்கற்றான் என்ற காரணப் பெயர் வந்தது. இதுவே நாளடைவில் மருவி முடக்கத்தான் என்று அழைக்கப் படுகிறது. இதனுடைய தாவரப் பெயர் கார்டியோஸ்பெர்மம் ஹலிக்காகேபம் (Cardiospermum helicacabum) என்பதாகும். இதை ஆங்கிலத்தில் பலூன் வைன் (Balloon vine) என்றும் அழைப்பார்கள். 

இதனுடைய மருத்துவ குணத்திற்கு காரணம் இதில் பொதிந்துள்ள வேதிப் பொருள்கள் ஆகும். அவையாவன அபிஜெனின் (Apigenin), லூட்டியொலின் (Luteolin), கார்டியோஸ்பெர்மின் (Cardiospermin), ஸ்கொபாலெடின் (Scopoletin), அம்பெல்லிபெரோன் (Umbelliferone) மற்றும் பல.




முடக்கத்தான் கீரையை மாதம் இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சிறிது கசப்பு சுவையுடையது, ஆனால் சமைத்து சாப்பிட்டால் இதன் கசப்பு சுவை அவ்வளவாக தெரியாது. இதை உணவில் தோசையாகவோ அல்லது துவையல் செய்தோ சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இக்கீரை மூட்டுகளில் தங்கியிருக்கும் யூரிக் ஆசிட் (Uric acid) என்ற காரணியை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். அவ்வாறு செய்யும் பொழுது உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உப்புக்களை தங்க வைத்து விடுகிறது, அதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

முடக்கத்தான் கீரையை கொதிக்க வைத்து உண்ண வேண்டாம், ஏனெனில் கொதிக்க வைக்கும் பொழுது அதிலுள்ள மருத்துவகுண வேதிப்பொருள் அழிந்துவிடும்.

ஆயுர்வேதம்


தமிழ்நாட்டில் தற்பொழுது ஆறு வகையான மருத்துவ முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன அவை 
  1. தமிழர் மருத்துவ முறை (சித்த மருத்துவம்)
  2. ஆங்கிலேயர் மருத்துவ முறை (அலோபதி மருத்துவம்)
  3. ஆரியர் மருத்துவ முறை (ஆயுர்வேத மருத்துவம்)
  4. முகமதியர் மருத்துவ முறை (யுனானி மருத்துவம்)
  5. இயற்கை மருத்துவ முறை (இயற்கை மருத்துவம்)
  6. ஜெர்மானிய மருத்துவ முறை (ஹோமியோபதி மருத்துவம்)
ஆயுர்வேதத்திற்கு முதலாசிரியர்கள் தேவதாசர் (தன்வந்திரி), சிசிருதர் என்பவர்களே. இவர்கள் இருவரும் ஒரு காலத்தவர்கள். கி.மு 6000 ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள். சிசிருதர் தேவதாசரின் சிஷ்யர் ஆவார். 

ஆயுர்வேதமானது 100  அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொறு அத்தியாயமும் 100 சுலோகங்களால் அமைக்கப் பட்டிருக்கிறது. 

ஆயுர்வேதம் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை பின்வருமாறு 
  1. சல்லியம் (இரண வைத்தியம்)
  2. சாலக்கியம் (கழுத்துக்கு மேற்பட்ட வியாதிகள்)
  3. காயம் (மற்ற உடலின் வியாதிகள்)
  4. பூதம் (பிசாசு குணங்கள்)
  5. கௌமாரம் (குழந்தை வைத்தியம்)
  6. ஆகதம் (விஷங்களைப் பற்றியது)
  7. இரசாயனம் (இளமையாக்கல்)
  8. வசீகரணம் (வீரிய விருத்தி)
சிசிருதர், விசுவாசமித்திரரின் மூத்த பிள்ளையுக்கு அடுத்த பிள்ளையாவார். இவர்கள் 7 பேர் அண்ணன் தம்பிகள் ஆவர். மூத்த பிள்ளையை தவிர ஏனையோர் தேவதாசரிடம் ஆயுர்வேதம் கற்றுக் கொண்டார்கள்.

சிசிருதர், சிசிருத சம்ஹிதை என்ற நூலை எழுதினார். இவர் இரண வைத்தியத்தில் (சர்ஜரி) நிபுணர். சம்ஹிதை என்றால் மஞ்சரி என்ற பொருள். அதாவது அவருக்கு முன்னிருந்த வைத்தியர்களுடைய அபிப்பிராயங்களை எல்லாம் எடுத்து அக்காலத்துக்கு தகுந்தபடி ஒழுங்குபடுத்தி நூல் செய்வதாகும். 

Wednesday, May 18, 2016

சோனுநிகம் சாலையோர வீடியோ



சோனுநிகம் பிரபல பாலிவுட் பாடகர். இவர் தமிழிலும் சில பாடல்கள் பாடியுள்ளார். அண்மையில் மும்பை வீதியில் பிச்சைகாரன் வேஷத்தில் அமர்ந்து பாட்டு பாடினார். அவர் வேஷம் போட்டு அமர்ந்து இருந்ததனால் ஒருவரும் கவனிக்கவில்லை. அவரவருக்கு அவரவர் வேலை, அதனால் ஏது நேரம் மனமயங்கும் பாடலை நின்று கேட்டு ரசிப்பதற்கு.............?

இதுவே கச்சேரியில் சோனுநிகம் பாடுகிறார் என்றால் ஆயிரக்கணக்கில் கொடுத்து ரசிப்பார்கள். இதுதானே உண்மை .....! போலியான உலகம்.

ஆனால் ...ஒரு இளைஞர் அவர் அருகில் வந்து அவரை பாராட்டி விட்டு, அவரிடமே நீங்கள் நன்றாக பாடுகிறீர்கள், உங்கள் பாடலை நான் பதிவு பண்ணிக்கலாமா? என்று அனுமதி கேட்டு பாடலை பதிவு பண்ணிக் கொள்கிறார். பாடல் பாடி முடிந்தவுடன் சோனுநிகம் கிளம்ப எத்தனிக்கும்போது அவரிடம் 12 ரூபாயை கொடுத்து நீங்கள் காலை உணவு சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள், சாப்பிட வைத்து கொள்ளுங்கள் என்று சொல்வது ...உண்மையில் மனதை வருடியது.

இந்த அனுபவத்தைப் பற்றி அவர் கூறுவது ....

நான்தான் அதே குரல்தான்...உடையிலும் தோற்றத்திலும் தான் வித்தியாசம் காண்பித்தேன். அத்தனை மனிதர்கள் பார்த்து கடந்து போனாலும் ஒருவர் வந்து நீங்க சாப்பிட்டீங்களா? என்று அன்பாக கேட்டு 12 ரூபாயை கொடுத்த பொழுது அத்தனை மகிழ்ச்சி ..! லட்சக்கணக்கில் சம்பாதித்த போது கிடைக்காத சந்தோசம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நம்மைச் சுற்றி நடக்கும் பல நல்ல விஷயங்களை நாம் கவனிக்க தவறி விடுகிறோம்....... பாராட்டவும் மறந்து விடுகிறோம்!

Tuesday, May 17, 2016

நெய்

'
"நெய்யில்லா உண்டி பாழ்" என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும்.

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட நெய் எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.



பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்கு பின் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்து விடும். இதனை சட்டியில் வைத்து காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரிந்து, வாசனை உண்டாகும். இதுவே நெய்யாகும். இதனை வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். 

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருந்து கெடாமல் பாதுகாக்க நெய்யை பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு தேக்கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

மொத்த கொழுப்பு = 99.5%

நிறைவுற்ற (பூரித) கொழுப்பு அமிலம் (Saturated Fatty Acids) = 77-81%
ஒற்றை அபூரித கொழுப்பு அமிலம் (Mono Unsaturated Fatty Acids) = 16-17%
நிறைவற்ற (அபூரித) கொழுப்பு அமிலம் (Poly Unsaturated Fatty Acids) = 3-6%




ஒமேகா கொழுப்பு அமிலம் (ω -fatty acids) என்றால் என்ன?

கொழுப்பு அமிலத்தில் முதல் கார்பன் அணு முனை ஒமேகா என்று அழைக்கப்படும். அபூரித இணைப்பு எந்த கார்பன் அணுவில் ஆரம்பிக்கிறதோ அந்த எண்ணை குறித்து பெயரிடப்படும். 


நெய்யை எவ்வாறு உணவில் பயன்படுத்த வேண்டும்?

"நெய் உருக்கி மோர் பெருக்கி ....."

நெய்யை இளஞ்சூட்டில் நன்றாக உருக்கி சுடுசாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து சூட்டை தணிக்கும். மலச்சிக்கலை போக்கும். வாத பித்த கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
  • ஞாபக சக்தியை தூண்டும் 
  • சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும் 
  • கண் பார்வையை கூட்டும்   
குடற்புண் குணமாக 

குடற்புண் என்பது சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருந்தாலோ அல்லது பட்டினி கிடந்தாலோ ஏற்படும். குடலில் உள்ள ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புற சுவரை புண்ணாக்கி விடுகிறது. மேலும் வாயு கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்து கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை பொருள் உபயோகிப்பவர்களுக்கும், அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் குடற்புண் உண்டாகிறது. இதனால் வாயிலும் புண் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இது போன்ற உபாதை உள்ளவர்கள், நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடற்புண் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும் மற்றும் மலச்சிக்கல் நீங்கும், ஜீரண சக்தியை தூண்டும்.

Monday, May 16, 2016

டாடா குடும்பம்

நான் வியந்து பார்க்கும் பல ஆளுமைகளில் மதிப்பிற்குரிய இரத்தன் டாடா அவர்களும் ஒருவர், என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மற்றும் முன்மாதிரியானவர். அதனால் அவரைப் பற்றி, அவரின் குடும்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பின்வரும் செய்திகள் இணையத்தில் எடுக்கப்பட்டது.




TATA Group

பண்டித ஜவஹர்லால் நேரு குடும்பம்




மதிப்பிற்குரிய நேரு அவர்கள் குடும்பத்தைப் பற்றி இருவேறு தகவல்கள் இணையதளத்தில் கிடைக்கப் பெறுகின்றன, எது உண்மை என்று தெரியவில்லை. 

Saturday, May 7, 2016

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்

தமிழ்நாடு 15 ஆவது சட்டசபை தேர்தல் வரும் மே திங்கள் 16 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதன் முடிவுகள் மே திங்கள் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அப்பொழுது தமிழ்நாட்டின் தலைவிதி அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆளப்போவது என்பது நிர்ணயிக்கப்படும்.


தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன, 2016 சட்டசபை தேர்தலை பற்றி பார்ப்பதற்கு முன்பு சுதந்திரம் (குடியரசு) அடைந்த தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களைப் பற்றி பார்ப்போம்.

குடியரசு இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு மதராஸ் மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தல்களும், வெற்றி பெற்று ஆட்சி  அமைத்தவர்களும் பின்வருமாறு


1968 ஆம் ஆண்டு மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப் பட்டது. அதன் பிறகு நடந்த தேர்தல்களும், ஆட்சி அமைத்தவர்களும் பின் வருமாறு 


கும்முடிபூண்டி (தொகுதி-1) யிலிருந்து கிள்ளியூர் (தொகுதி-234) வரை, தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கிறது.  





2016 ஆம் ஆண்டு தேர்தல் பலமுனை போட்டியாக உள்ளது. இந்த தேர்தலில் பின்வரும் பெரிய கட்சிகளும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டி போடுகின்றன 







2016 தேர்தலின் முடிவு



Friday, May 6, 2016

கோபுரக்கலசம்

"கோயில் இல்லாத ஊரில் யாரும் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழியை நம் முன்னோர்கள் சொன்னதை கேள்விப் பட்டதுண்டா.....அது ஏன் என்று யோசித்ததுண்டா .....? 


கோயில்களையும், கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அது பற்றிய அறிவியல் உங்களுக்கு தெரியுமா..?

கோபுரக்கலசங்கள் பொதுவாக ஐம்பொன்களால் செய்யப் பட்டதாகும். இந்த கலசத்தில் கொட்டப்படும் தானியங்களும் மற்றும் உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்கு கொடுக்கிறது. தானியங்கள் என்று சொல்லும்போது அது நவதானியங்களைக் குறிக்கும், அவையாவன நெல், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு, சோளம், மக்காச்சோளம், எள் போன்றவற்றை குறிக்கும்.

இதில் வரகு தானியத்தை அதிகம் கொட்டினார்கள், ஏன் என்று தேடினால் விடை மிக ஆச்சரியம் தருவதாக இருக்கிறது. "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது.


இது மட்டும் தானா......இல்லை .......இன்னும் இருக்கிறது, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியங்களை நீக்கிவிட்டு புதிய தானியங்களை நிரப்புவார்கள்", அது ஏன் என்ற காரணத்தை தேடினால் அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு தானியங்கள் செயல் இழந்து விடுகிறது. 

கலசங்களில் தானியங்களை வைப்பதினால் மற்றொறு பயனும் இருந்தது, அந்த காலத்தில் மழை பெய்தால் குறைந்தது மூன்று மாதத்திற்கு விடாமல் பெய்யும். ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை. அதனால் கலசத்தில் இருக்கும் தானியத்தை எடுத்து மீண்டும் விதைக்கலாமே .....!

ஒரு இடத்தில் இடியோ அல்லது மின்னலோ தாக்கினால் அங்குள்ள மிக உயரமான இடத்தில் அமைந்த இடிதாங்கியே முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரை காப்பாற்றும் என்பது அதன் உயரத்தை பொறுத்தது. கோபுரக் கலசங்களே இடிதாங்கிகள் ஆகும். உதாரணமாக கோபுரத்தின் உயரம் 100 மீட்டர் என்றால் 200 மீட்டர் விட்டம் வரைக்குமான பரப்பளவில் எத்தனை பேர் இருந்தாலும் இடி தாக்காமல் காப்பாற்றப்படுவார்கள். அதாவது சுமார் 31400 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப் படுவார்கள். 

சில கோயில்களில் நான்கு வாயில்கள் இருக்கின்றன, அது நாலாபுறமும் 31400 சதுர மீட்டர் பரப்பளவை காத்து நிற்கிறது. இது ஒரு தோராய கணக்கு தான் .....எத்தனை பிரமிப்பு ....!!!

சும்மாவா சொன்னாங்க நம்ம பெரியவங்க....!!!

குளியல்



உண்மையில் நம்மில் பலருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை...நம்ப முடியுதா?...இல்லைதானே .....

அதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம் ....

குளிப்பது ......அழுக்கு போகவா.........! நிச்சயம் கிடையாது.............!

மாத மளிகை பட்டியலில் சோப்புக்கு என்று ஒரு தொகை ஒதுக்குவோம், இல்லையா.......! சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?  கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடல் முழுவதும் ஆயில் படிந்து விடும். இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பை பயன்படுத்தினார்கள். 

சோப்பு போட்டு குளிப்பதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம்? ஆனால் வணிக பெருமுதலைகள் சும்மா இருப்பார்களா? ஆயிலில் வேலை செய்வோர் மட்டுமே பயன்படுத்தி வந்த சோப்பை எல்லோரும் பயன்படுத்தும்படி பல திட்டம் தீட்டி, கிருமிகள் என்ற பயத்தை உருவாக்கி, நடிகர்களை நடிக்க வைத்து நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதனால் என்ன ஆனது?

சோப்பு போட்டு குளிப்பதனால் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலம் அழிக்கப்படுகிறது. இதை சீர் செய்யவே உடம்பு பெரும் பாடுபடுகிறது. நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலில் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பு போடுவதனால் தோல் மூலமாக நம் உடலில் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தியை தடுத்து விடுகிறோம்.

சரி....பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா......?

குளியல் = குளிர்வித்தல் 

குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு வரும் 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பமேயாகும். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்ப கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிக்கிறோம்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலையில் ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும். பின் முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி கடைசியாக தலைப்பகுதி.

எதற்கு இப்படி .........? காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலையில் ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டியிருக்கும். 

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண் முன்னே கொண்டு வாருங்கள். 


குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நனையும். அப்பொழுது வெப்பக்கழிவு கீழ் இருந்து மேல் எழும்பி கடைசியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெளியேறிவிடும். இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா .....! உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

ஏன் ..................?

உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது, சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத்துணியோடு இருப்பது மிகவும் நல்லது. அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% பிராண வாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்திக் கொள்ளும். பிராண வாயு அதிகரித்தால் பித்தம் நீங்கி அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

சித்தர்கள் அருளியுள்ள மூச்சு கணக்கு


தமிழ் மொழியால் நம்முடைய ஆயுள் நீளும் என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம் என்று சித்தர்கள்  கூறுகிறார்கள், எப்படி?

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில், ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு x ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள், நாழிகை ஒன்றுக்கு 360 மூச்சு (15 x 24) எனச் சித்தர்களால் வகுப்பப்பட்டுள்ளது. இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது. 

ஒரு மணி நேரத்திற்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21600 மூச்சு வீதம் ஓடுகிறது. 

இதற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? இந்த கேள்வி உங்கள் மனதில் எழலாம், அதற்கான பதில்....

இந்த 21600 மூச்சுக்களை குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூட்டினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஓடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், உடலுறவு மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் ஒரு நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறையும்.

தமிழ் வயிற்று மொழி அல்ல; நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாழ்க்கை நெறிமொழி!

Thursday, May 5, 2016

சிதம்பர ரகசியம்


பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன (Centre Point of World's Magnetic Equator).


இதற்காக ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய யூனியன் நியூக்லியர் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்காக இதுவரை செலவு செய்த தொகை தோராயமாக 10 பில்லியன் ஸ்டெர்லிங் (£10bn) ஆகும். இந்த ஆராய்ச்சி மையத்தின் பெயர் CERN (Conseil Européen pour la Recherche Nucléaire). 


இயற்கை விதிகளை கண்டுப்பிடிப்பதற்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். அதற்கு ஆதாரமாக நம் நடராஜர் சிலையை அங்கு அமைத்துள்ளார்கள்.


இதைத்தான் எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப் வசதியும் இல்லாமல் நம் முன்னோர்கள் கண்டறிந்து, உணர்ந்து, அணுத்துகள் அசைந்துகொண்டேயிருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்தி அனைவரையும் வழிபட செய்தார்கள். இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்பேற்பட்டது? 

திருமூலரின் திருமந்திரம் உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்.

சிதம்பர ரகசியங்கள் 

1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி என்று கூறப்படுகிறது.

2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் மூன்றும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது 79 டிகிரி, 41 நிமிட கிழக்கு தீர்க்க ரேகையில் (Longitude) அமைந்துள்ளது. இதை கூகுள் மேப்பில் பார்த்தால் அதன் துல்லியம் நமக்கு புரியும்.  நமது முன்னோர்கள் பொறியியல், புவியியல் மற்றும் வானவியலில் எவ்வளவு தலைசிறந்து விளங்கியுள்ளார்கள், ஆச்சரியம்......!  


3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றது (கண், காது, மூக்கு, வாய், சிறுநீர் துவாரம் மற்றும் மலத்துவாரம்).

4) விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவை சுவாசிக்கின்றான் என்பதைக் குறிக்கின்றது (15x60x24).

5) இந்த 21600 தகடுகளை வேய 72000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.

6) திருமந்திரத்தில் திருமூலர் 
          மானுடராக்கை வடிவு சிவலிங்கம் 
               மானுடராக்கை வடிவு சிதம்பரம் 
                    மானுடராக்கை வடிவு சதாசிவம் 
                         மானுடராக்கை வடிவு திருக்கூத்தே 
என்று கூறுகிறார். அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம் என்ற பொருளைக் குறிக்கின்றது. 

7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் உள்ள இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைப்பார்கள். அதாவது "சி, வா, ய, ந, ம" என்ற ஐந்து எழுத்துக்களே ஆகும். "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேர் வழியாக இல்லாமல் பக்கவாட்டில் அமைந்துள்ளது. இதை தாங்க 4 தூண்கள் உள்ளன, இது 4 வேதங்களை குறிக்கிறது. 

8) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களை குறிக்கிறது. இந்த 28 தூண்களும் 64 மெற்பலகைகளை கொண்டுள்ளது. இது 64 கலைகளை குறிக்கும் மற்றும் இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் மனித உடலில் ஓடும் இரத்த நாளங்களை குறிக்கின்றது.

9) பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்திற்கு பக்கம் இருக்கும் மண்டபத்தில் 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கிறது. 

10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "Cosmic Dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

கடவுளின் அணுத்துகள் (God's Particle)

நம் இந்தியாவில் இதுபோல் ஒரு ஆராய்ச்சியை தொடங்கப் போகிறார்கள். இந்த ஆராய்ச்சி நமது தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைய இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கு பெயர் "நியூட்ரினோ துகள்" [Indian-based Neutrino Observatory (INO)] ஆராய்ச்சி. இதனால் நமது சுற்றுச் சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.


இதைப்பற்றி  பின்னர் பார்ப்போம்.