Home

Kanzen Chemistry Campus

Molecule of the Week

Molecule of the Month

Book for All

Prakriti or Muppini

APJ Abdul Kalam

ALBERT EINSTEIN

Saint

Buddhism

BMI

Talks

Name Reactions

LMES

Free Online Courses

My Postdoc Mentor

My PhD Mentor

PhD

MPharmacy

BPharmacy

Renowned Research Institute

My Research Profile

Obesity

Diabetes

Infectious Diseases

Cell Signaling Pathway

Siddha Institute

Siddha Vidhyarthi

Siddhars Padalgal

Great Personalities

Search Engine

FOLLOWING

Saturday, October 27, 2018

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் சொன்னது


மூளைக்கு வல்லாரை 
முடிவளர நீலிநெல்லி 
ஈளைக்கு  முசுமுசுக்கை 
எலும்பிற்கு இளம்பிரண்டை! 

பல்லுக்கு வேலாலன் 
பசிக்கு சீரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி!  

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம் 
தோலுக்கு அருகுவேம்பு!

நரம்புக்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சித்தும்பை
உரத்திற்கு முருங்கைபூ
ஊதலுக்கு நீர்முள்ளி! 

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்!

உடலுக்கு எள்ளெண்ணெய்
உணர்ச்சிற்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டு!

கருப்பைக்கு அசோகப்பட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகு! 

விந்திற்கு ஓரிதழ்தாமரை  
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை!

  கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி!

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீர்
வேர்க்குருவிற்கு பனைநுங்கு
வெட்டைக்கு சிறுசெருப்படை!

தீப்புண்ணுக்கு குங்கிலியவெண்ணெய்
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணுக்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரியெட்டி! 

குருதிக்கழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை!

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்   
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை 
ஆண்மைக்கு பூனைக்காலி!

வெண்படைக்கு பூவரசு கார்போகி 
விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி 
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு!

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்கு வெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பு!  

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளமயக்க கஞ்சாகள்ளு
உடலிளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே!

அருந்தமிழர் வாழ்வியலில் 
அன்றாடம் சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!


நன்றி: WhatsApp

No comments:

Post a Comment