Sunday, November 26, 2017

தமிழ் எழுதிப் பழகுவோம்

தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. தற்சமயம் தமிழ் பேசும் மக்களில் பலரும் பிழை இல்லாமல் எழுதுவது அரிதாகி வருகிறது. 

ஏன்

நம்மால் தமிழ் மொழியை ஏன் பிழை இல்லாமல் எழுத முடிவதில்லை. ஏனென்றால் தமிழில் சில எழுத்துக்களை நமக்கு சரியாக உச்சரிக்கத் தெரிவதில்லை. குறிப்பாக பின்வரும் எழுத்துக்களைச் சொல்லலாம்.

"ண" ; "ந" ; "ன"

"ல" ; "ழ" ; "ள"

"ர" ; "ற"

ண் ; ந் ; ன் - எப்படி பயன்படுத்த வேண்டும்? முதலில் மூன்று சுழி "ண்" மற்றும் இரண்டு சுழி "ன்" என்று சொல்வதை விடவேண்டும். "ண்" என்பதை "டண்ணகரம்" என்றும், "ன்" என்பதை "றன்னகரம்" என்றும், "ந்" என்பதை "தந்நகரம்" என்றே சொல்ல வேண்டும்.

உதாரணம்: மண்டபம்; கொண்டாட்டம்

மூன்று சுழி "ண்" ஒற்றெழுத்துக்குப் பின் எப்பவும் "ட" என்ற உயிர்மெய் எழுத்து தான் வரும்.

உதாரணம்: தென்றல்; சென்றான்

இரண்டு சுழி "ன்" ஒற்றெழுத்துக்குப் பின் எப்பவும் "ற" என்ற உயிர்மெய் எழுத்து தான் வரும்.

உதாரணம்: பந்து; வெந்தயம்; மந்தை

"ந்" ஒற்றெழுத்துக்குப் பின் எப்பவும் "த" என்ற உயிர்மெய் எழுத்து தான் வரும்.


தமிழ் எழுத்துக்களின் வரிசை பட்டியலை உற்று கவனியுங்கள். "ண" வுக்கு முன் எழுத்து "ட" ஆகும்; "ந" வுக்கு முன் எழுத்து "த" ஆகும்; அதுபோல் "ன" வுக்கு முன் எழுத்து "ற" இருப்பதைப் பார்க்கலாம்.

ஆகையால் நாம் நம் தாய்மொழியை பிழை இல்லாமல் எழுதி பழகுவோம்.

லகர, ளகர, ழகர வேறுபாடுகள்

"ர்" & "ற்"