Tuesday, December 12, 2017
Sunday, December 3, 2017
ஜெயலலிதா குடும்பப் பின்னணி
செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாயிருக்கிறது. இது அவரே ஏற்படுத்திக் கொண்டது தான். பொதுவாழ்விற்கு வருபவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். இதை செல்வி ஜெயலலிதா ஒரு போதும் செய்ததில்லை.
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் 1970 களில் குமுதம் பத்திரிகை க்கு கொடுத்த பேட்டியில் திருமணம் ஆகாமல் திரு சோபன் பாபுவுடன் ஒன்றாக கணவன் மனைவியாக வாழ்கிறேன் என்று உண்மையாக தைரியமாக சொன்னார். அதன் பிறகு அரசியலில் இறங்கினார்; தனிப்பட்ட வாழ்க்கையை திரை போட்டு மூடிக் கொண்டார்.
அதனால் ஏற்பட்ட விளைவு?
டிசம்பர் 5, 2016 க்கு பிறகு ஆளாளுக்கு நான் தான் செல்வி ஜெயலலிதாவின் மகள் என்றோ அல்லது மகன் என்றோ கிளம்பி வருகிறார்கள். தற்சமயம் "அம்ருதா" என்ற பெண்மணி, நான் தான் செல்வி ஜெயலலிதாவின் மகள் என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இதுவரை இவர் திருமதி சைலஜாவின் மகளாக அறியப்பட்டார். திருமதி சைலஜா ஜெயலலிதாவின் சகோதரி ஆவார்.
அம்ருதா தனக்கு டி என் ஏ சோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுயிருக்கிறார். சோதனைக்கு அனுமதி கிடைத்து, வெற்றி அடையும் பட்சத்தில், நாடே ஜெயலலிதாவை "அம்மா" என்று அழைத்து கொண்டாடிய போது, அவரோ தன் சொந்த மகளை நாட்டு மக்களிடம் இருந்து மறைத்து விட்டாரே என்று பழித்துப் பேசும்.
இதனால் இதுவரை நாம் சொல்லி வந்த "செல்வி" ஜெயலலிதா என்கின்ற அடைமொழி இனிமேல் "திருமதி" ஜெயலலிதா என்று சொல்லக் கூடுமோ...ஆண்டவனுக்கே வெளிச்சம்.
செல்வி ஜெயலலிதா அவர்களின் பழைய புகைப்படம்:
செல்வி ஜெயலலிதா அவர்களின் பழைய புகைப்படம்:
வாசுதேவன் & சைலஜா
அம்ருதா
Subscribe to:
Posts (Atom)