Friday, February 17, 2017
Wednesday, February 8, 2017
ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை
- நேர்மையாக இருப்பது அந்த நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது
- பொது இடங்களில் தன்னால் யாருக்கும் எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்று கவனமாக இருப்பது
- பொது இடங்களில், பயணங்களில் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது
- தாய்மொழியை நேசிப்பது, தாய்மொழியிலே குழந்தைக்கு பேர் வைப்பது
- ஒழுங்கு முறையில் வரிசையாக நின்று பேரூந்து மற்றும் இரயிலில் ஏறி பயணிப்பது; இறங்குபவர்களுக்கு முதலில் வழிவிட்டு பின்பு தான் ஏறுவது
- வெளியூர் மக்கள் உதவி கேட்கும்பொழுது மனமுவந்து செய்வது
- தனக்கான உணவை பெரும்பாலும் தானே சமைத்து அளவோடு உண்பது
- எஸ்கலேட்டர் மற்றும் படிக்கட்டுகளில் போகும்போது ஓரமாக நின்று அவசரமாக போவோருக்கு வழிவிடுவது
- அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வது கூடுமானவரை பொது போக்குவரத்தை பயன்படுத்துவது
- அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் வருவது; சளைக்காமல் வேலை செய்வது; தங்கள் பணியை நேசித்து செய்வது
நாமும் இதை கடைபிடிக்கலாமே.....!
ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத பொன்மொழிகள்
- வைகறையில் துயில் எழு
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
- நீரை உண் உணவை குடி
- உணவும் மருந்தும் ஒன்றே
- படுக்கை காபி படுக்கையில் தள்ளும்
- பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே
- அஜீரணமும் மலச்சிக்கலும் ஆதி நோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்
- சர்க்கரையும் உப்பும் விஷமாகும்
- சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்
- சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்
நாமும் கடைபிடித்து நோயின்றி சிறப்பாக வாழ்வோம்!
Subscribe to:
Posts (Atom)