Tuesday, May 2, 2017

அசைவ உணவு உண்ணும் தாவரங்கள்


அசைவ உணவு உண்ணும் தாவரங்களைப் பற்றி அறிந்த பொழுது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.......

நாம் பல கதைகளில் மனிதர்களை உண்ணும் தாவரங்களை பற்றி படித்திருப்போம். ஆனால் அப்படி பட்ட தாவரங்கள் இருக்கின்றன என்னும் பொழுது அதிச்சியாகத்தானே இருக்கும். 

இந்த வகையான தாவரங்களின் முக்கிய உணவே சிறு சிறு பூச்சிகள், எலிகள், வண்டுகள், தவளைகள் போன்றவையாகும். பிரபல விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ரொபின்சன் தலைமையில் ஆன குழு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள விக்டோரியா  மலைப்பகுதியில் உள்ள செடி கொடிகளை ஆராய்ச்சி பண்ணும்பொழுது இதை கண்டறிந்தார்கள்.


இந்த வகையான தாவரங்களை நாம் 21 ஆம் நூற்றாண்டில் தான் கண்டறிந்துள்ளோம். இந்த செடியின் இலைகள்தான் அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் சிறு பூச்சிகள் மற்றும் எலி போன்ற உயிர் இனங்களை அப்படியே பிடித்து கொள்கிறது. அதன் பிறகு அவ்விலைகளில் சுரக்கும் ஒரு விதமான எண்ணெய் போன்ற பசையினால் அந்த உயிர் இனங்கள் தப்பவே முடியாது.. தாவரத்தில் சுரக்கும் எண்ணெய் போன்ற பொருள் [நொதிகள் (Enzymes - Proteases, ribonucleases, esterases, acid as well as alkaline phosphatases, phosphoamidase)] பூச்சிகளை செரிக்க செய்து அதற்கு தேவையான சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.

இதை படிக்கும் பொழுது உங்களுக்கும் ஆச்சரியம் வருகிறது அல்லவா ...........  


No comments: