இந்தியாவின் ஜனநாயக திருவிழா, 18-வது பாராளுமன்ற தேர்தல் மார்ச் 20-ஆம் தேதி தொடங்கி ஜூன் 4-ஆம் தேதி இனிதே முடிவடைந்தது. இந்த திருவிழா மொத்தமாக 7 கட்டங்களாக 75 நாட்களுக்கு நடைபெற்றது. தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி திரு. ராஜிவ் குமார் அவர்கள் மார்ச் 16 ஆம் தேதி அறிவித்தார்.
ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற தேதி மற்றும் இடங்கள் பின் வருமாறு:
தேசிய அளவில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இந்தியா கூட்டணியும் போட்டியிட்டன. இந்தியா கூட்டணியில் பல குளறுபடிகள் இருந்தன. சில இடங்களில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரும் புதிருமாக போட்டியிட்டன. உதாரணத்திற்கு கேரளா மாநிலத்தை சொல்லலாம். தமிழ் நாட்டில் இந்த இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் போட்டியிட்டன.
தமிழ் நாட்டில் நான்கு முனை போட்டியிருந்தது. திமுக கட்சி தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக கட்சி தலைமையில் ஒரு கூட்டணி, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.
முதல் கட்டத்தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கு முதல் கட்டத்திலேயே தேர்தல் முடிவடைந்தது. தமிழ் நாட்டில் 69.72 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இம்முறை பதிவான ஓட்டுகளை அறிவிப்பதில் தேர்தல் ஆணையத்திற்கு பல முறை தடுமாற்றங்கள் ஏற்பட்டன. முதலில் 68 சதவீதம் என்றும், அப்புறம் 72 சதவீதம் என்றும், மறுநாள் காலையில் 69.72 சதவீதம் என்றும் அறிவித்தது. இது மக்களிடையே தேர்தல் ஆணையத்தின் மீது இருந்த நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கியது. ஏனென்றால் மின்னணுவியல் ஓட்டு எந்திரத்தில் எப்படி இவ்வளவு வித்தியாசம் வரும் என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கும் காரணம் உள்ளது. இம்முறை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் நடத்தும் பாசறையாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தமிழ் நாட்டில் இருக்கும் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் செயல்பாட்டில் முறை தவறி நடந்து கொண்டது. நாம் தமிழர் கட்சிக்கு "கரும்பு விவசாயி" சின்னத்தை ஒதுக்காமல் தேர்தல் நடைபெறும் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் புதிதாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தை ஒதுக்கியது. ஏன் என்று கேட்டால் நாம் தமிழர் கட்சி உரிய நேரத்தில் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று கூறி தட்டிக்கழித்து விட்டது. மேலும் அச்சின்னத்தை வேண்டும் என்றே "பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி" என்ற பேர் கூட தெரியாத கட்சிக்கு ஒதுக்கியது. இதற்கு முன்னர் இந்த கட்சி தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டி போட்டதே இல்லை. மக்களுக்கும் இக்கட்சியை பற்றி ஒன்றும் தெரியாது. தேர்தல் ஆணையத்திடம் கேட்கும் போது அந்த கட்சிதான் முன்னாடியே இச்சின்னம் வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். அதனால் அவர்களுக்கு கொடுத்து விட்டோம் என்று பொய் சொன்னார்கள். இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றம் வரை சென்றும் அவர்களுக்கு நீதி கிடைக்க வில்லை. பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி தமிழ் நாட்டில் நான்கு இடத்தில் மட்டுமே போட்டியிட்டது. ஏனென்றால் அக்கட்சியின் சார்பில் போட்டியிட யாரும் முன்வரவில்லை. இது அனைத்தும் பாஜக வின் திருவிளையாடல்கள். இது மட்டுமா தேர்தல் ஆணையம் செய்தது? அந்த கட்சி போட்டியிடாத இடங்களில் எல்லாம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது. இது எவ்வளவு அயோக்கியத்தனம்? நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது வேதனையின் உச்சம்.
இது மட்டுமா? பாஜக கட்சி கூட்டணியில் இருந்தவர்களுக்கு அவர்கள் கேட்ட சின்னம் உடனே கிடைத்தது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம், தினகரன் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு "குக்கர்" சின்னம், வாசன் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் இப்படி அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னத்தை கொடுத்தார்கள். இதுதான் இந்தியாவின் ஜனநாயகம்.......😀😀😀
தேர்தல் பரப்புரையில் பா ஜ க வின் பிரசாரம் மிகவும் மோசமானதாகவும், வெறுப்பு உணர்வை தூண்டுவதாகவும் இருந்தது. முக்கியமாக பிரதமர் மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களும் இந்து மக்களிடையே பேசும் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் உங்களது தாலி தங்கத்தை புடுங்கி இஸ்லாமிய மக்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்றும், உங்களிடம் உள்ள கால்நடைகளில் பாதியை எடுத்து அவர்களுக்கு தந்து விடுவார்கள் என்றும் பேசினார்கள்.
இது மட்டுமா? ஒடிஷாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. திரு. நவீன் பட்நாயக் கட்சியில் தமிழகத்தை சேர்ந்த திரு. பாண்டியன் IAS அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் சேர்ந்திருந்தார். அவர் நவீன் பட்நாயக் அவர்களுக்கு எல்லாமும் ஆக இருந்தார். இதை பொறுக்காத பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஒடிஸாவை ஒரு தமிழர் ஆளலாமா? உங்கள் ஓட்டு தமிழருக்கா இல்லை ஓடியாவை சேர்ந்தவருக்கா? என்று மாநில கட்சி போல முகம் சுளிக்கும் அளவுக்கு பேசினார்கள். மேலும் பூரி ஜெகன் நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையின் சாவியை தமிழர்கள் திருடி விட்டார்கள் என்று எதை எதையோ சொன்னார்கள். அப்பப்பா ....இவர்கள் தான் தேசியத்தை தூக்கி பிடிப்பவர்கள்....😃😃😃
ஜூன் 1 ஆம் தேதி அனைத்து கட்டங்களின் தேர்தல் முடிந்து ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு ஜூன் 1 ஆம் தேதி மாலையில் கருத்து கணிப்பு என்ற பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் பாஜக 350 முதல் 410 இடங்களில் வெற்றி பெரும் என்றும் தமிழ் நாட்டில் 3 முதல் 5 இடங்களில் வெற்றி பெரும் என்றும் கணித்தார்கள். ஆனால் ஜூன் 4 ஆம் தேதி வந்த முடிவுகளில்படி அனைத்து ஊடகங்களும் மோடி ஊடகங்களாக இருக்கிறது என்பது புரிந்தது.
பாஜக கூட்டணி மொத்தமாக 293 இடங்களிலும், பாஜக மட்டும் தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திய மக்கள் செய்த ஒரே நல்ல காரியம், பாஜக வுக்கு முழு பெரும்பான்மை கொடுக்காதது தான். இல்லையென்றால் திரு மோடி அரசின் சர்வாதிகார போக்கை மக்கள் சந்தித்து இருக்க வேண்டும். அதுபோல இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமாக 234 இடங்களில் வெற்றி வாகை சூடியது. தமிழ் நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் நாடு முடிவுகள் பின் வருமாறு:
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் ஒவ்வொரு கூட்டணியும் பெற்ற மொத்த வாக்குகளும் அதன் சதவீதமும்.
தமிழ் நாட்டில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி திமுக கூட்டணி அனைத்து தொகுதியிலும் (39) வெற்றி பெற்றது. ஆனால் பாஜக கூட்டணி எதிர்பாராத விதமாக 18 சதவீதம் வாக்குகளை பெற்று தமிழ் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதுபோல நாம் தமிழர் கட்சி 12 சதவீதம் வாக்குகளை பெரும் என்று எதிர் பார்த்து இருந்த மக்களுக்கு 8.15 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்று பதிவு செய்யப்பட்ட கட்சியாக சாதனை படைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி எப்பவும் போல இந்த பாராளுமன்ற தேர்தலிலும் 20 ஆண் வேட்பாளர்கள், 20 பெண் வேட்பாளர்கள் என்று களம் இறக்கியது (புதுச்சேரி உட்பட). அதில் 6 பெண் வேட்பாளர்கள் 1 இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி (வித்யா ராணி வீரப்பன்), பெரம்பலூர் (தேன்மொழி), மயிலாடுதுறை (காளியம்மாள்), நாகப்பட்டினம் (கார்த்திகா), சிவகங்கை (எழிலரசி) மற்றும் தூத்துக்குடி (ரொவீனா ரூத் ஜானே). இவர்களின் வெற்றி மூலம் நான் தமிழர் கட்சியை இந்திய கட்சிகள் உற்று நோக்க ஆரம்பித்துள்ளன.
நன்றி: ECI; விக்கிபீடியா; ஹிந்து
No comments:
Post a Comment