Thursday, March 29, 2018

பூவரசு


சிறுவயதில் பூவரசு மரத்தின் இலையை சுருட்டி பீப்பீ ஊதி விளையாடி திரிந்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது. அதுபோல், கிராமங்களில் பெண்கள் மார்கழி மாதம் அதிகாலையில் வீட்டிற்கு முன்பு சாணம் கரைத்து நீர் தெளித்து, கோலம் போடுவார்கள். பிறகு அந்த கோலத்தின் நடுவில் மாட்டு சாணத்தை உருட்டி பிள்ளையார் பிடித்து அதில் பூவரசு மரத்தின் பூவை வைத்து கோலத்தின் நடுவில் வைப்பார்கள். அதை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். 

இந்த மரத்தின் தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா [Thespesia populnea (L)].

பூவை ஏன் வைத்தார்கள் என்பது தெரியாது ஆனால் இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை மற்றும் பட்டை அனைத்தும் மருத்துவ குணம் உடையது.

இலை, பூ - பொதுவாக விஷத்தை முறிக்கும் தன்மையுடையது. அதனால் சித்த மருத்துவர்கள் இதன் இலை மற்றும் பூவை பூச்சிக்கடி, விஷ வண்டுக்கடிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்குக்கு பற்று போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காய் - பூவரசு காயை இடித்து சாறு பிழிந்தால் லேசான பிசுபிசுப்புடன் மஞ்சள் நிறத்தில் பால் போன்று சாறு வரும். இதை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் மறைந்து போகும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும். கை கால் மூட்டு வலிக்கு அருமருந்தாகும்.

பட்டை - பூவரசு மரத்தின் வேர் பட்டையை எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த 50 மிலி தண்ணீருடன் 10 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதி உண்டாகும். இதன் மூலம் தோல் நோயிலிருந்து விடுதலை பெறலாம். செதில் செதிலாக உதிரக்கூடிய சோரியாசிஸ் நோய்க்கு பூவரசம் பட்டை நல்ல மருந்தாகும்.

பூவரசு காய், செம்பருத்தி பூ, பழுத்த பூவரச இலை, இவற்றை சேர்த்து அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு புண் ஏற்பட்டால் ஆறவே ஆறாது. இதற்கு பூவரசு பட்டை சிறந்த மருந்தாகும். பட்டையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து பிறகு ஆறிய பின்பு அந்த தண்ணீரை ஊற்றி கழுவி வர புண் குணமாகும்.

ஞாபகம் மறதி நோயுக்கும் இது நல்ல மருந்தாகும்.

இத்தனை நோயுக்கும் அருமருந்தாகும் இந்த மரத்தில் பின்வரும் மருத்துவ குண வேதிப்பொருட்கள் உள்ளன. இது செஸ்க்யூடெர்பின் (Sesquiterpenes) என்ற வகையை சேர்ந்தது. 




பூவரசு மரம் அதிக அளவு பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்றாகும்.

பூவரசு
டாக்டர் சிவராமன்

Monday, January 1, 2018

கழற்சிக்காய்


கழற்சிக்காய் பொதுவாக காடுகளில் வளரக்கூடியது. நம் நாட்டில் வேலியோரங்களிலும், புதர்களிலும் காணப்படும் ஒரு கொடி ஆகும். இக்கொடியில் முட்கள் நிறைந்திருக்கும். இதன் காய்க்குள் இருக்கும் விதை வைரத்தைப் போன்று மிகவும் கடினமாக இருக்கும். இதன் விதை பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. அவை 
  1. காய்ச்சலைக் குறைக்கும்.
  2. மலேரியா காய்ச்சலுக்கு அருமருந்தாகும்.
  3. கல்லீரல், மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும்
  4. சர்க்கரை நோயுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
உபயோகிக்கும் முறைகள்:

கழற்சிக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதை (பருப்பு) யை உடைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கால் தேக்கரண்டி பொடியுடன் சிறிது பெருங்காயம், அரை டம்ளர் மோர், கொஞ்சம் உப்பு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 48 நாள் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும், வயிற்றுப புண்கள் ஆறும், வாயுவை வெளித்தள்ளும்; விரைவாதம் குணமாகும். 

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இது மிகவும் முக்கிய மருந்தாகும்.

4 பங்கு அளவு கழற்சிக்காய் விதைப்பொடி 1 பங்கு மிளகுப்பொடி எடுத்து நன்கு கலந்து ஒரு புட்டியில் போட்டு வைத்துக்கொள்ளவும். இதிலிருந்து தினமும் 1 தேக்கரண்டி அளவு 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். கர்ப்பப்பை பிரச்சனைகளையும் குணமாக்கும் வல்லமை உடையது.

யானைக்கால் நோயுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம். உடம்பில் எதிர்ப்பு சக்தியை வளர்க்கக் கூடியது.

இத்தனை மருத்துவக் குணங்களுக்கும் காரணம் இதில் பொதிந்துள்ள மருத்துவக் குணப்பொருட்கள் ஆகும், அவை



கழற்சிக்காய் குணங்கள் 

Sunday, December 3, 2017

ஜெயலலிதா குடும்பப் பின்னணி


செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாயிருக்கிறது. இது அவரே ஏற்படுத்திக் கொண்டது தான். பொதுவாழ்விற்கு வருபவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். இதை செல்வி ஜெயலலிதா ஒரு போதும் செய்ததில்லை. 

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் 1970 களில் குமுதம் பத்திரிகை க்கு கொடுத்த பேட்டியில் திருமணம் ஆகாமல் திரு சோபன் பாபுவுடன் ஒன்றாக கணவன் மனைவியாக வாழ்கிறேன் என்று உண்மையாக தைரியமாக சொன்னார். அதன் பிறகு அரசியலில் இறங்கினார்; தனிப்பட்ட வாழ்க்கையை திரை போட்டு மூடிக் கொண்டார்.

அதனால் ஏற்பட்ட விளைவு?

டிசம்பர் 5, 2016 க்கு பிறகு ஆளாளுக்கு நான் தான் செல்வி ஜெயலலிதாவின் மகள் என்றோ அல்லது மகன் என்றோ கிளம்பி வருகிறார்கள். தற்சமயம் "அம்ருதா" என்ற பெண்மணி, நான் தான் செல்வி ஜெயலலிதாவின் மகள் என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இதுவரை இவர் திருமதி சைலஜாவின் மகளாக அறியப்பட்டார். திருமதி சைலஜா ஜெயலலிதாவின் சகோதரி ஆவார். 

அம்ருதா தனக்கு டி என் ஏ சோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுயிருக்கிறார். சோதனைக்கு அனுமதி கிடைத்து, வெற்றி அடையும் பட்சத்தில், நாடே ஜெயலலிதாவை "அம்மா" என்று அழைத்து கொண்டாடிய போது, அவரோ தன் சொந்த மகளை நாட்டு மக்களிடம் இருந்து மறைத்து விட்டாரே என்று பழித்துப் பேசும்.

இதனால் இதுவரை நாம் சொல்லி வந்த "செல்வி" ஜெயலலிதா என்கின்ற அடைமொழி இனிமேல் "திருமதி" ஜெயலலிதா என்று சொல்லக் கூடுமோ...ஆண்டவனுக்கே வெளிச்சம்.

செல்வி ஜெயலலிதா அவர்களின் பழைய புகைப்படம்:


வாசுதேவன் & சைலஜா 


அம்ருதா 


Sunday, November 26, 2017

தமிழ் எழுதிப் பழகுவோம்

தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. தற்சமயம் தமிழ் பேசும் மக்களில் பலரும் பிழை இல்லாமல் எழுதுவது அரிதாகி வருகிறது. 

ஏன்

நம்மால் தமிழ் மொழியை ஏன் பிழை இல்லாமல் எழுத முடிவதில்லை. ஏனென்றால் தமிழில் சில எழுத்துக்களை நமக்கு சரியாக உச்சரிக்கத் தெரிவதில்லை. குறிப்பாக பின்வரும் எழுத்துக்களைச் சொல்லலாம்.

"ண" ; "ந" ; "ன"

"ல" ; "ழ" ; "ள"

"ர" ; "ற"

ண் ; ந் ; ன் - எப்படி பயன்படுத்த வேண்டும்? முதலில் மூன்று சுழி "ண்" மற்றும் இரண்டு சுழி "ன்" என்று சொல்வதை விடவேண்டும். "ண்" என்பதை "டண்ணகரம்" என்றும், "ன்" என்பதை "றன்னகரம்" என்றும், "ந்" என்பதை "தந்நகரம்" என்றே சொல்ல வேண்டும்.

உதாரணம்: மண்டபம்; கொண்டாட்டம்

மூன்று சுழி "ண்" ஒற்றெழுத்துக்குப் பின் எப்பவும் "ட" என்ற உயிர்மெய் எழுத்து தான் வரும்.

உதாரணம்: தென்றல்; சென்றான்

இரண்டு சுழி "ன்" ஒற்றெழுத்துக்குப் பின் எப்பவும் "ற" என்ற உயிர்மெய் எழுத்து தான் வரும்.

உதாரணம்: பந்து; வெந்தயம்; மந்தை

"ந்" ஒற்றெழுத்துக்குப் பின் எப்பவும் "த" என்ற உயிர்மெய் எழுத்து தான் வரும்.


தமிழ் எழுத்துக்களின் வரிசை பட்டியலை உற்று கவனியுங்கள். "ண" வுக்கு முன் எழுத்து "ட" ஆகும்; "ந" வுக்கு முன் எழுத்து "த" ஆகும்; அதுபோல் "ன" வுக்கு முன் எழுத்து "ற" இருப்பதைப் பார்க்கலாம்.

ஆகையால் நாம் நம் தாய்மொழியை பிழை இல்லாமல் எழுதி பழகுவோம்.

லகர, ளகர, ழகர வேறுபாடுகள்

"ர்" & "ற்"