Monday, January 11, 2016

எலுமிச்சை பழம்




எலுமிச்சை பழத்திற்கு தேவக்கனி என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆனால் சித்தா நூலிலிருந்து அறியப்படுவது என்னவென்றால் "எலி" எல்லா பழங்களையும் கடித்து விடும், ஆனால் எலுமிச்சையை மட்டும் தொடவே தொடாது. எனவே எலி மிச்சம் வைத்த பழம் "எலிமிச்சை", அது மருவி "எலுமிச்சை" ஆகியிருக்கும்.

எலுமிச்சையின் புளிப்பு சுவைக்கு காரணம் அதிலிருக்கும் சிட்ரிக் அமிலமாகும். மேலும் வைட்டமின் "சி" (அஸ்கார்பிக் அமிலம்) அதிக அளவில் இருக்கிறது. இது நம் உடல் "இரும்பு சத்தை" உட்கிரகிக்க உதவுகிறது. நாம் ஹோட்டலில் சில சமயம் சிக்கன் ப்ரை (அ) சிக்கன் 65 ஆர்டர் செய்வது வழக்கம். சிக்கனுடன், எலுமிச்சை பழத்துண்டையும் சேர்த்து கொடுப்பார்கள், ஏன்? 



ஏனெனில் சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. ஆகையால் சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிட வேண்டும்.



Saturday, January 9, 2016

தூங்கும் முறை

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும்தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். 

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று 

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை 
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை 
நம்பிக் காண்

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, உடலில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல் போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.


எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு 
ஓங்குயிர் தெற்கு 
மத்திமம் மேற்கு 
மரணம் வடக்கு 

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது 
தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும் 
மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும் 
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது 

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும்போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் தேவையான பிராண வாயு உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுத்து தூங்கக் கூடாது.


இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் உடலுக்கு தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச் செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப்போய் விஷமாக நேரிடும்.

ரூபாயின் குறியீடு

மதிப்பிற்குரிய திரு உதயகுமார் அவர்களால் உருவாக்கப்பட்டது


Friday, January 8, 2016

மரம் நடு - படித்ததில் பிடித்தது

நீ  சந்தோஷமாக இருக்கும்போது வாழை மரத்தை நடு 
         நீ  துக்கமாக இருக்கும்போது புங்கை மரத்தை நடு
நீ  வெற்றியடையும்போது தேக்கு மரத்தை நடு
        நீ  தோல்வியடையும்போது பூவரசம் மரத்தை நடு
உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை நடு 
        உன் தாய் தந்தைக்காக ஆலம் மரத்தை நடு
உன் சந்ததி மகிழ்ச்சியாக இருக்க தென்னை மரத்தை நடு 
        உன் வீட்டில் இடமிருந்தால் முடிந்தவரை மரம் நடு 

மித்ரவருண சக்தி - படித்ததில் ஆச்சரியப்பட்டது

அகத்தியர் அருளிய சமஸ்கிருதப் பாடல் (அகத்திய சம்கிதம்)

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே 
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி 
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ் 
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ 
மித்ரவருணசங்கியதம்"

விளக்கம் 

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருணசக்தியைப் பெறலாம்"

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் மற்றும் மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.



குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிஷம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.