எலுமிச்சை பழத்திற்கு தேவக்கனி என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆனால் சித்தா நூலிலிருந்து அறியப்படுவது என்னவென்றால் "எலி" எல்லா பழங்களையும் கடித்து விடும், ஆனால் எலுமிச்சையை மட்டும் தொடவே தொடாது. எனவே எலி மிச்சம் வைத்த பழம் "எலிமிச்சை", அது மருவி "எலுமிச்சை" ஆகியிருக்கும்.
எலுமிச்சையின் புளிப்பு சுவைக்கு காரணம் அதிலிருக்கும் சிட்ரிக் அமிலமாகும். மேலும் வைட்டமின் "சி" (அஸ்கார்பிக் அமிலம்) அதிக அளவில் இருக்கிறது. இது நம் உடல் "இரும்பு சத்தை" உட்கிரகிக்க உதவுகிறது. நாம் ஹோட்டலில் சில சமயம் சிக்கன் ப்ரை (அ) சிக்கன் 65 ஆர்டர் செய்வது வழக்கம். சிக்கனுடன்,
எலுமிச்சை பழத்துண்டையும் சேர்த்து கொடுப்பார்கள், ஏன்?
ஏனெனில் சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச்
சத்து உள்ளது. இரும்புச் சத்தை
நமது உடல் முழுமையாக எடுத்துக்
கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. ஆகையால் சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி
சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை
பிழிந்துவிட்டுச் சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment