Tuesday, April 26, 2016

அம்மா + அப்பா வார்த்தையின் சிறப்பு

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247
உயிர் எழுத்துக்கள் - 12
மெய்யெழுத்துக்கள்  - 18
உயிர்மெய்யெழுத்துக்கள் - 216
ஆயுத எழுத்து - 1

உயிர்மெய்யெழுத்துக்களை மேலும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
வல்லினம் - க ச ட த ப ற 
மெல்லினம் - ங ஞ ண ந ம ன  
இடையினம் - ய ர ல வ ழ ள


அம்மா = அ + ம் + மா = உயிர் எழுத்து + மெய்யெழுத்து + உயிர்மெய்யெழுத்து 
அப்பா = அ + ப் + பா = உயிர் எழுத்து + மெய்யெழுத்து + உயிர்மெய்யெழுத்து

பெற்றோர்கள், கருவில் உயிரையும் மெய் என்ற உடலையும் கொடுத்து, வளர்த்து உயிர்மெய்யாகிய குழந்தையை ஈன்றெடுக்கிறார்கள். இதில் அம்மாவின் பங்கு அளப்பரியது. அதனால்தான் குழந்தை பெற்றோர்களை அம்மா அப்பா என்று அர்த்தத்தோடு கூப்பிடுகிறது.


அம்மா என்ற சொல்லில் வரும் "ம" மெல்லினம் வகையை சார்ந்தது, ஆகவே அம்மா மென்மையான மனம் படைத்தவராக இருக்கிறார்.

அப்பா என்ற சொல்லில் வரும் "ப" வல்லினம் வகையை சார்ந்தது. ஆகவே அப்பா கண்டிப்புடன் நடந்து கொள்வதுபோல் காண்பித்துக் கொள்கிறார்.

ஆகையால் தமிழை தாய் மொழியாக கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அம்மா அப்பா என்று கூப்பிட கற்று கொடுங்கள்.

No comments: