Saturday, September 17, 2016

கடிகாரமும் உடல் உறுப்பு பணிகளும்



கடவுள் ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் இரண்டு மணி நேரம் ஒதுக்கி உள்ளார். அந்தந்த நேரத்தில் அந்த உடல் உறுப்பு அதனதன் வேலையை செய்ய நாம் அனுமதிக்க வேண்டும், இல்லையேல் நமது ஆரோக்கியம் பாழாகும்.

காலை 3.00 மணியிலிருந்து 5.00 மணி வரை 


இது நுரையீரலுக்கான நேரம், இந்நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாக சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்ய உகந்த நேரமாகும்.

காலை 5.00 மணியிலிருந்து 7.00 மணி வரை 


இது பெருங்குடலுக்கான நேரம், இந்த நேரத்தில் காலை கடன்களை கண்டிப்பாக முடித்து விட வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். இந்த நேரம் உடலுறவுக்கும் உகந்த நேரமாகும், ஏனென்றால் இந்நேரத்தில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிக அளவு இருக்கும்.

காலை 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரை 


இது வயிற்றுக்கான நேரம், இந்த நேரத்தில் கல்லை தின்றாலும் வயிறு கரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும். காலை உணவை எப்பொழுதுமே தவிர்க்க கூடாது. காலையில் சாப்பிடுவது தான் உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை 


இது மண்ணீரலுக்கான நேரம், காலையில் உண்ட உணவு செரித்து இரத்தமாகவும், ஊட்டச்சத்தாகவும் மாற்றும் நேரமாகும். இச்சமயம் தண்ணீரே குடிக்கக் கூடாது. நீரிழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரமாகும்.

காலை 11.00 மணியிலிருந்து 13.00 மணி வரை 


இது இதயத்திற்கான நேரமாகும், இந்நேரத்தில் அதிகமாக பேசுதல், கோபப்படுதல், படபடத்தல் கூடாது. இதய நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்கும் நேரமாகும்.

மதியம் 13.00 மணியிலிருந்து 15.00 மணி வரை


இது சிறுகுடலுக்கான நேரம், இந்த நேரத்தில் மிதமான உணவை உட்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுப்பது நல்லது.

மதியம் 15.00 மணியிலிருந்து 17.00 மணி வரை


இது சிறுநீர்ப்பைக்கான நேரம், நீர் கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரமாகும்.

மாலை 17.00 மணியிலிருந்து 19 மணி வரை 


இது சிறுநீரகங்களின் நேரமாகும், பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிகாலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய மற்றும் வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

இரவு 19.00 மணியிலிருந்து 21.00 மணி வரை 


இது பெரிகார்டியத்தின் நேரமாகும், பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஜவ்வு ஆகும். இந்நேரம் இரவு உணவுக்கு உகந்த நேரமாகும்.

இரவு 21.00 மணியிலிருந்து 23.00 மணி வரை


இது டிரிபிள் ஹீட்டருக்கான நேரம். டிரிபிள் ஹீட்டர் என்பது உடல் உறுப்பு அல்ல. இது உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்நேரம் உறங்கச் செல்ல உகந்த நேரமாகும்.

இரவு 23.00 மணியிலிருந்து 1.00 மணி வரை


இது பித்தப்பைக்கான நேரம், இந்த நேரத்தில் தூங்காமல் விழித்திருந்தால் பித்தப்பை செயல்பாடு பாதிக்கும்.

இரவு 1.00 மணியிலிருந்து 3.00 மணி வரை


இது கல்லீரலுக்கான நேரம், இந்நேரத்தில் உட்கார்ந்து இருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கண்டிப்பாக படுத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் உடலில் ஓடும் இரத்தத்தை கல்லீரல் சுத்திகரித்து அனுப்பும் நேரமாகும். இந்நேரம் விழித்திருந்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பு இல்லாமல் பாதிப்பு அடைவீர்கள்.

No comments: