மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதல்வர் திரு ஜெயலலிதா அவர்கள் 22-09-2016 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 10.15 க்கு சேர்க்க படுகிறார்.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இரவு 1.00 மணிக்கு முதல்வர் அவர்களின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடுகிறது. இதை கேட்டவுடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் இரவு 1.05 மணி முதல் மருத்துவமனை முன்பு திரளாக குவிகிறார்கள். அவர்கள் அனைவரும் அன்று இரவு மற்றும் மறுநாள் முழுவதும் மருத்துவமனை கதவின் முன்பு காத்திருக்கிறார்கள். கடவுளின் அருளால் நமது முதல்வர் உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கிறார்.
படம்: நன்றி விகடன்
நமது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பாசத்தை கண்டவுடன் உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு. இதே பாசத்தை நமது விவசாயிகளிடமும், மக்களிடமும் காண்பித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவர்களுக்கு தெரியாத என்ன? நமது முதல்வர் அவர்கள் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் "பொன் முட்டையிடும் வாத்து" என்று! முதல்வர் மட்டும் இல்லையென்றால் அமைச்சர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் "செல்லா காசு"!
வாழ்க நமது அமைச்சர்களின் அளப்பரிய சேவை!
மக்கள் மத்தியில் இன்னொறு விதமான எண்ண ஓட்டமும் உள்ளது. இந்த காய்ச்சல் உண்மையான காய்ச்சலா? இல்லை சொத்து குவிப்பு வழக்கில் வரும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன்னாடியே ஏற்படுத்திக் கொண்ட நாடகக் காய்ச்சலா? அல்லது உண்மையிலேயே முதல்வர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாரா?
ஆண்டவனுக்கே வெளிச்சம்!!
நம் மதிப்பிற்குரிய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

No comments:
Post a Comment