தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்ந்தது ஆகும். இதை ஆங்கிலத்தில் Betel leaf, betel nut and slaked lime (CaO + water) என்று சொல்வார்கள்.
வெற்றிலை
வெற்றிலையில் உள்ள மருத்துவ குண பொருட்கள்
பாக்கு
பாக்கில் உள்ள மருத்துவ குண பொருட்கள்
சுண்ணாம்பு
(CaO + water) = Ca(OH)2
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
- டையாஸ்டேஸ் (Diastase) என்ற பொருள் வெற்றிலையில் அதிகம் உள்ளது. இது ஸ்டார்ச் போன்ற பொருளை செரிக்க உதவுகிறது.
- நம் வாயில் உமிழ்நீரை அதிகம் சுரக்க செய்கிறது. உமிழ்நீரில் உள்ள நொதிகள் கிருமி நாசினியாகவும், உணவை செரிமானம் பண்ணவும் உதவுகிறது.
- உடல் பருமனை குறைக்கவும் உதவி புரிகிறது. ஒரு வெற்றிலை உடன் சில மிளகு துண்டுகளை சேர்த்து 2 மாதங்கள் உண்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
- தாய்ப்பாலை சுரக்கவும் பயன்படுத்தப் படுகிறது. ஒரு இலையை எண்ணெயில் ஊற வைத்து மார்பகங்களின் வெளிப்புறத்தில் வைக்க வேண்டும்.
பாக்கின் மருத்துவ குணங்கள்
- மலச்சிக்கலை போக்கும். மலத்துவாரத்தில் உள்ள புண்களை குணப்படுத்தும்.
- பற்களில் கசியும் இரத்தத்தை போக்கும்.
சுண்ணாம்பின் மருத்துவ குணங்கள்
- எண்ணெய் பதார்த்தங்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
- பாக்கில் உள்ள மருத்துவ குண பொருட்களை வெளிக்கொணர உதவுகிறது.
- ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது.
- பற்களை உறுதியுடன் வைத்துக் கொள்கிறது.
தாம்பூலம் பயன்படுத்தும் முறை
ஒரு பெரிய வெற்றிலையின் பின்புறத்தில் சிறிதளவு சுண்ணாம்பை தடவிக்கொள்ள வேண்டும். அதனுடன் மிகச்சிறிய அளவு பாக்கை சேர்த்து, மடித்து வாயில் வைத்து நன்றாக மென்று உமிழ்நீரை விழுங்க வேண்டும். தாம்பூலத்தில் உள்ள இந்த மூன்று பொருட்கள் நம் உடலில் உள்ள முக்குணமான வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சரியான விகிதத்தில் சமன் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment