பவளமல்லி சிறுமர வகையை சார்ந்த தாவரமாகும். இதனை பாரிஜாதம் என்றும் அழைப்பார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த தாவரம் பல நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. குறிப்பாக வழுக்கை அல்லது பூச்சி வெட்டுதல், அதிகப்படியான நரம்பு வலி (Sciatica), மூலம், குடற்புழுக்களை வெளியேற்றல் மற்றும் மலச்சிக்கலுக்கு அருமருந்தாகும். இதன் தாவரவியல் பெயர் நிக்டன்தெஸ் ஆர்போர்டிரிஸ்டிஸ் (Nyctanthes arbor-tristis), ஓலியேசியே (Oleaceae) குடும்பத்தை சேர்ந்ததாகும்.
இதன் இலை, மரப்பட்டை(Bark), விதை அனைத்தும் மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
விதை - தண்ணீர் விட்டு அரைத்து விழுது போல் எடுத்து தலையில் தடவி வந்தால் வழுக்கை குணமாகும்.
இலை - கசாயம் செய்து 5 - 10 மிலி குடித்து வந்தால் அதிகப்படியான நரம்பு வலி (Sciatica) குணமாகும். குடற்புழுக்களை வெளியேற்றவோ அல்லது மலச்சிக்கலுக்கோ 10 - 15 மிலி அருந்த வேண்டும்.
மரப்பட்டை - ஆஸ்துமா நோயுக்கு மரப்பட்டை பொடியை (1 - 2 கி) வெற்றிலை சாறுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
அனைத்து மருத்துவ குணநலன்களுக்கும் இதில் உள்ள ஈறிடாய்டு க்ளைக்கோசைடு (Iridoid glycosides) என்ற மருத்துவகுண கலவைகளே காரணமாகும். அவையாவன பின்வருமாறு
நிபா வைரஸ் (NiV) தொற்று நோய் முதன்முதலில் மலேசியாவில் கெம்பங் சுங்காய் என்ற இடத்தில் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது வௌவால் மூலம் பரவும் நோயாகும். வௌவால் கடித்த பழங்களை (பேரீச்சம் பழம்) சாப்பிடுவதால் இந்த நோய் பரவுகிறது. இது மனிதர்களையும் விலங்குகளையும் தாக்குகிறது. முக்கியமாக பன்றிகளையும், குதிரைகளையும் தாக்குகிறது. நோயின் அறிகுறிகள் பொதுவாக காய்ச்சல், மூச்சு திணறல், மூளை காய்ச்சல் ஏற்படும். இது எளிதில் பரவக்கூடிய உயிர் கொல்லி நோயாகும். இதற்கு இதுவரை தடுப்பு ஊசி கண்டுபிடிக்க படவில்லை.
நிபா வைரஸ் நோயிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தினமும் (1 வாரம்) பவளமல்லி கசாயத்தை ஒரு வேளை அருந்தி வந்தால் நல்லது. நோய் கண்டவர்கள் தினமும் 3 வேளை அருந்த வேண்டும்.
கசாயம் செய்யும் முறை
பவளமல்லி இலை 5 - 6 எடுத்து 200 மிலி தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும். தண்ணீரின் அளவு 100மிலி ஆக வரும்வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்பு ஆற வைத்து, வடிகட்டி அதனுடன் 4 அல்லது 5 சொட்டு எலுமிச்சை பழச்சாறை சேர்த்து பருக வேண்டும்.
No comments:
Post a Comment