Saturday, October 27, 2018

பன்றிக்காய்ச்சல் (Swine Flu)

பன்றிக்காய்ச்சல் நோயை ஆங்கிலத்தில் ஸ்வைன் ப்ளூ (Swine Flu) என்று அழைப்பார்கள். இந்த நோயுக்கு H1N1 என்ற வைரஸ் தான் காரணமாகும். இது முதலில் பன்றியை தாக்குகிறது. பன்றியின் மூலம் மனிதனுக்கு பரவுவதால் இந்நோயை பன்றிக்காய்ச்சல் என்று கூறுகிறோம். 

நோய்க்கான அறிகுறிகள்

பசியின்மை, மூக்கு ஒழுகுதல், தும்மல், இருமல், தொண்டை வறட்சி, மூட்டு வலி மற்றும் வயிற்றுப்போக்கு.


நோய் பரவும் முறை 


நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.


ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி வளர்ப்பவர்கள், அதற்கு உணவு கொடுத்த பின்பு உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். வீட்டு விலங்குகள் வளர்க்கும் இடங்களில் உணவு உட்கொள்ளக்கூடாது. நோய் அறிகுறி தெரிந்தவர்களிடம் மிகவும் கவனத்துடன் பழக வேண்டும்.

நோய் குணமாக்கும் வழிகள் 

ஆங்கில மருத்துவ முறை 

வரும் முன் காப்பது: ப்ளூ வேக்சின் (Flu Vaccine) எடுத்துக் கொள்வது (ஆண்டுக்கு ஒரு முறை)
வந்த பின்பு குணமாக்குவது: டமிப்ளூ (Tamiflu) என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இம்மருந்தை மருத்துவர் ஆலோசனையின்படி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.


சித்த மருத்துவ முறை 

வரும் முன்பு காப்பது 

சித்த மருத்துவத்தில் "கபசுர குடிநீர்" கொடுக்கப் படுகிறது. இது 15 மூலிகைகள் கொண்ட மருத்துவ கலவையாகும். சித்தா மருந்தகத்தில் இம்மருந்து பொடியாக கிடைக்கிறது. இப்பொடியை 2.6 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி 300மிலி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு ஆற வைத்து, வடிகட்டி நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் 5 நாட்களுக்கு பருக வேண்டும். இப்படி குடித்து வந்தால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். 

மூலிகைகள்: நிலவேம்பு (Andrographis paniculata), கண்டுபரங்கி (Clerodendrum serratum), சுக்கு (Dried ginger), திப்பிலி (Piper longum), லவங்கம் (Syzygium aromaticum), ஆடாதொடா வேர் (Justicia adhatoda), சிருக்கன்கொரி (செந்தட்டி) வேர் (Tragia involucrata), சீந்தில் (Tinospora cardifolia), கற்பூரவள்ளி (Anisochilus carnosus), கோரைக்கிழங்கு (Cyperus rotundus), கோஷ்டம் (Cheilocostus specious), அக்கரகாரம் (Anacyclus pyrethrum), வட்டத்திரிப்பி வேர் (Sida acuta), முள்ளி வேர் (Hygrophila auriculata) மற்றும் கடுக்காய் தோல் (Terminalia chebula)

வந்த பின்பு காப்பது 
  1. கண்டங்கத்திரி (Solanum xanthocarpum), சுக்கு (Dried ginger) மற்றும் வில்வ இலை (Aegle marmelos) மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க (decoction) வைக்க வேண்டும். பிறகு இந்த கசாயத்தை ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் 8 நாட்களுக்கு சாப்பிட வேண்டும்.
  2. நன்னாரி (Hemidesmus indicus), தூதுவளை (Solanum trilobatum), செந்தட்டி (Tragia involucrata), ஆடாதொடா (Justicia adhatoda), கடுக்காய் (Terminalia chebula), நெல்லிக்காய் (Gooseberry), தாந்திரிக்காய் (Terminalia bellirica), சுக்கு (Dried ginger), சிசுவேர் (Oldenlandia umbellata) மற்றும் ஆடுதின்னாப்பாலை (Aristolochia bracteolata) ஆகிய அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க (decoction) வைக்க வேண்டும். பிறகு இந்த கசாயத்தை ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் 8 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் கபசுரம் குணமாகும்.

No comments: