சோனுநிகம் பிரபல பாலிவுட் பாடகர். இவர் தமிழிலும் சில பாடல்கள் பாடியுள்ளார். அண்மையில் மும்பை வீதியில் பிச்சைகாரன் வேஷத்தில் அமர்ந்து பாட்டு பாடினார். அவர் வேஷம் போட்டு அமர்ந்து இருந்ததனால் ஒருவரும் கவனிக்கவில்லை. அவரவருக்கு அவரவர் வேலை, அதனால் ஏது நேரம் மனமயங்கும் பாடலை நின்று கேட்டு ரசிப்பதற்கு.............?
இதுவே கச்சேரியில் சோனுநிகம் பாடுகிறார் என்றால் ஆயிரக்கணக்கில் கொடுத்து ரசிப்பார்கள். இதுதானே உண்மை .....! போலியான உலகம்.
ஆனால் ...ஒரு இளைஞர் அவர் அருகில் வந்து அவரை பாராட்டி விட்டு, அவரிடமே நீங்கள் நன்றாக பாடுகிறீர்கள், உங்கள் பாடலை நான் பதிவு பண்ணிக்கலாமா? என்று அனுமதி கேட்டு பாடலை பதிவு பண்ணிக் கொள்கிறார். பாடல் பாடி முடிந்தவுடன் சோனுநிகம் கிளம்ப எத்தனிக்கும்போது அவரிடம் 12 ரூபாயை கொடுத்து நீங்கள் காலை உணவு சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள், சாப்பிட வைத்து கொள்ளுங்கள் என்று சொல்வது ...உண்மையில் மனதை வருடியது.
இந்த அனுபவத்தைப் பற்றி அவர் கூறுவது ....
நான்தான் அதே குரல்தான்...உடையிலும் தோற்றத்திலும் தான் வித்தியாசம் காண்பித்தேன். அத்தனை மனிதர்கள் பார்த்து கடந்து போனாலும் ஒருவர் வந்து நீங்க சாப்பிட்டீங்களா? என்று அன்பாக கேட்டு 12 ரூபாயை கொடுத்த பொழுது அத்தனை மகிழ்ச்சி ..! லட்சக்கணக்கில் சம்பாதித்த போது கிடைக்காத சந்தோசம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நம்மைச் சுற்றி நடக்கும் பல நல்ல விஷயங்களை நாம் கவனிக்க தவறி விடுகிறோம்....... பாராட்டவும் மறந்து விடுகிறோம்!