Showing posts with label 5 elements. Show all posts
Showing posts with label 5 elements. Show all posts

Sunday, January 24, 2016

அறுசுவைகள்

பொதுவாக நாம் அறிந்த சுவைகள் ஆறு, அவை 
  1. இனிப்பு 
  2. கசப்பு 
  3. புளிப்பு 
  4. உவர்ப்பு 
  5. உறைப்பு  
  6. துவர்ப்பு 

ஒவ்வொரு சுவையும் தோன்றியது பஞ்சபூதங்களின் கலப்பாகும். அவை பின்வருமாறு 
  1. மண் + நீர் = இனிப்பு 
  2. காற்று + ஆகாயம் = கசப்பு 
  3. மண் + தீ = புளிப்பு 
  4. நீர் + தீ = உவர்ப்பு 
  5. காற்று + தீ = உறைப்பு 
  6. மண் + காற்று = துவர்ப்பு 


ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளன. 

இனிப்பு 

உடலை ஊட்டப்படுத்தி வளர்த்து பருக்க வைக்கும். இச்சுவை அளவிற்கு அதிகமானால் கபத்தை அதிகரிக்கும்; செரிமனத்தைக் குறைத்து விடும். பெரியோருக்கு மதுமேக நோயை உண்டுபண்ணும். 

கசப்பு 

கசப்பு சுவை பெரும்பாலான நோய்களுக்கு நல்லது. தாவரத்தில் இச்சுவை அதிகமிருந்தால் அதில் ஏராளமான மருத்துவ குண  வேதிப்பொருட்கள் இருக்கின்றது என்று பொருள். பித்த நோய்கள் மற்றும் கப நோய்கள் குணமாகும். மேலும் உடலில் உள்ள விஷத்தன்மையை போக்கும் குணமுடையது. கசப்பை அதிக அளவு சாப்பிட்டால் வாயுவை உண்டாக்கும்.

புளிப்பு 

புளிப்பு சுவை பித்தத்தை தூண்டி ஜீரணத்தை நெறிப்படுத்தும். காய்கறிகளை புளிச்சாற்றில் ஊற வைத்து சமைத்தால் அதிலுள்ள உயிர் சத்தும் புரதச்சத்தும் கெடாமல் இருக்கும். இச்சுவை அளவுக்கு அதிகமானால் நரம்பு தசைகள் தளரும் மற்றும் இரத்த சோகை எற்படும்.  

உவர்ப்பு 

உவர்ப்பு சுவையை குறைந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். "சிறுக அளவோடு சேர்த்துண்ண தேகத்து உறுப்பின் சுருக்கம் குறையும்" என்பது பழமொழி. அதிக அளவு சேர்த்துக்  கொண்டால் இரத்தக்கொதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் எற்படும்.

உறைப்பு 

உறைப்பு சுவை செரிமனத்தை தூண்டும்; கபத்தை போக்கும் மற்றும் உணர்ச்சியை தூண்டும். அதிக அளவு எடுத்து கொண்டால் நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும்.

துவர்ப்பு 

துவர்ப்பு சுவையை மருத்துவ சுவை என்று கூறுவார்கள். ஏனெனில் இது இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையுடையது. இச்சுவை நெல்லிகனியிலும் மற்றும் வாழைப்பூவிலும் அதிகம் நிறைந்து இருக்கும்.


நம் உணவில் இந்த அறுசுவையையும் அளவோடு சமமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

NHANES - Taste and Smell Examination Component Manual
Nutrition & Food Sciences