Showing posts with label Bathing. Show all posts
Showing posts with label Bathing. Show all posts

Friday, May 6, 2016

குளியல்



உண்மையில் நம்மில் பலருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை...நம்ப முடியுதா?...இல்லைதானே .....

அதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம் ....

குளிப்பது ......அழுக்கு போகவா.........! நிச்சயம் கிடையாது.............!

மாத மளிகை பட்டியலில் சோப்புக்கு என்று ஒரு தொகை ஒதுக்குவோம், இல்லையா.......! சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?  கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடல் முழுவதும் ஆயில் படிந்து விடும். இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பை பயன்படுத்தினார்கள். 

சோப்பு போட்டு குளிப்பதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம்? ஆனால் வணிக பெருமுதலைகள் சும்மா இருப்பார்களா? ஆயிலில் வேலை செய்வோர் மட்டுமே பயன்படுத்தி வந்த சோப்பை எல்லோரும் பயன்படுத்தும்படி பல திட்டம் தீட்டி, கிருமிகள் என்ற பயத்தை உருவாக்கி, நடிகர்களை நடிக்க வைத்து நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதனால் என்ன ஆனது?

சோப்பு போட்டு குளிப்பதனால் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலம் அழிக்கப்படுகிறது. இதை சீர் செய்யவே உடம்பு பெரும் பாடுபடுகிறது. நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலில் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பு போடுவதனால் தோல் மூலமாக நம் உடலில் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தியை தடுத்து விடுகிறோம்.

சரி....பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா......?

குளியல் = குளிர்வித்தல் 

குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு வரும் 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பமேயாகும். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்ப கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிக்கிறோம்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலையில் ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும். பின் முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி கடைசியாக தலைப்பகுதி.

எதற்கு இப்படி .........? காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலையில் ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டியிருக்கும். 

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண் முன்னே கொண்டு வாருங்கள். 


குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நனையும். அப்பொழுது வெப்பக்கழிவு கீழ் இருந்து மேல் எழும்பி கடைசியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெளியேறிவிடும். இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா .....! உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

ஏன் ..................?

உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது, சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத்துணியோடு இருப்பது மிகவும் நல்லது. அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% பிராண வாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்திக் கொள்ளும். பிராண வாயு அதிகரித்தால் பித்தம் நீங்கி அனைத்து நோய்களும் ஓடிவிடும்.