Showing posts with label Chidambaram secret. Show all posts
Showing posts with label Chidambaram secret. Show all posts

Thursday, May 5, 2016

சிதம்பர ரகசியம்


பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன (Centre Point of World's Magnetic Equator).


இதற்காக ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய யூனியன் நியூக்லியர் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்காக இதுவரை செலவு செய்த தொகை தோராயமாக 10 பில்லியன் ஸ்டெர்லிங் (£10bn) ஆகும். இந்த ஆராய்ச்சி மையத்தின் பெயர் CERN (Conseil Européen pour la Recherche Nucléaire). 


இயற்கை விதிகளை கண்டுப்பிடிப்பதற்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். அதற்கு ஆதாரமாக நம் நடராஜர் சிலையை அங்கு அமைத்துள்ளார்கள்.


இதைத்தான் எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப் வசதியும் இல்லாமல் நம் முன்னோர்கள் கண்டறிந்து, உணர்ந்து, அணுத்துகள் அசைந்துகொண்டேயிருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்தி அனைவரையும் வழிபட செய்தார்கள். இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்பேற்பட்டது? 

திருமூலரின் திருமந்திரம் உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்.

சிதம்பர ரகசியங்கள் 

1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி என்று கூறப்படுகிறது.

2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் மூன்றும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது 79 டிகிரி, 41 நிமிட கிழக்கு தீர்க்க ரேகையில் (Longitude) அமைந்துள்ளது. இதை கூகுள் மேப்பில் பார்த்தால் அதன் துல்லியம் நமக்கு புரியும்.  நமது முன்னோர்கள் பொறியியல், புவியியல் மற்றும் வானவியலில் எவ்வளவு தலைசிறந்து விளங்கியுள்ளார்கள், ஆச்சரியம்......!  


3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றது (கண், காது, மூக்கு, வாய், சிறுநீர் துவாரம் மற்றும் மலத்துவாரம்).

4) விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவை சுவாசிக்கின்றான் என்பதைக் குறிக்கின்றது (15x60x24).

5) இந்த 21600 தகடுகளை வேய 72000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.

6) திருமந்திரத்தில் திருமூலர் 
          மானுடராக்கை வடிவு சிவலிங்கம் 
               மானுடராக்கை வடிவு சிதம்பரம் 
                    மானுடராக்கை வடிவு சதாசிவம் 
                         மானுடராக்கை வடிவு திருக்கூத்தே 
என்று கூறுகிறார். அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம் என்ற பொருளைக் குறிக்கின்றது. 

7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் உள்ள இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைப்பார்கள். அதாவது "சி, வா, ய, ந, ம" என்ற ஐந்து எழுத்துக்களே ஆகும். "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேர் வழியாக இல்லாமல் பக்கவாட்டில் அமைந்துள்ளது. இதை தாங்க 4 தூண்கள் உள்ளன, இது 4 வேதங்களை குறிக்கிறது. 

8) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களை குறிக்கிறது. இந்த 28 தூண்களும் 64 மெற்பலகைகளை கொண்டுள்ளது. இது 64 கலைகளை குறிக்கும் மற்றும் இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் மனித உடலில் ஓடும் இரத்த நாளங்களை குறிக்கின்றது.

9) பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்திற்கு பக்கம் இருக்கும் மண்டபத்தில் 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கிறது. 

10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "Cosmic Dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

கடவுளின் அணுத்துகள் (God's Particle)

நம் இந்தியாவில் இதுபோல் ஒரு ஆராய்ச்சியை தொடங்கப் போகிறார்கள். இந்த ஆராய்ச்சி நமது தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைய இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கு பெயர் "நியூட்ரினோ துகள்" [Indian-based Neutrino Observatory (INO)] ஆராய்ச்சி. இதனால் நமது சுற்றுச் சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.


இதைப்பற்றி  பின்னர் பார்ப்போம்.