பழைய சோற்றின் பயன்கள்
- இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
- உடல் சோர்வை போக்கி உற்சாகமான மனநிலையை தருகிறது.
- உடலிலுள்ள அணுச்சிதைவுகளை தடுக்கிறது.
- பழைய சாதத்தில் வைட்டமின் பி 6, பி 12 நிறைய இருக்கிறது.
- சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ஏகப்பட்ட நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.
- காலையில் பழைய சோற்றை சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடல் சூடு தணியும். குடல்புண், வயிற்றுவலி குணமாகும்.
- நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் வராது.
- இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
- பழைய சாதத்துடன் இரண்டு சின்ன வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி மேலும் அதிகரிக்கும்.
- அலர்ஜி, அரிப்பு போன்றவை குணமாகும்.
- 100 கி சாதத்தில் 3.4 மி.கி அளவு இரும்பு சத்து உள்ளது அதுவே பழைய சோற்றில் இரும்பு சத்து அளவு அதிகரித்து 73.9 மி.கி உள்ளது.
எப்படி தயாரிப்பது?
நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார் ...!