ப்ளூம் பாக்ஸ் (Bloom Box) என்றால் என்ன?
நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது யார்? நாமெல்லாம் பெருமையாக சொல்லக்கூடிய தமிழர் திரு கே ஆர் ஸ்ரீதர் அவர்கள் தான்.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் (Illinois University) பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்குள்ள நாசா (NASA) வில் வேளையில் அமர்ந்தார். அங்கு அவர்க்கு கொடுக்கப்பட்ட வேலையானது, செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா? என கண்டறிவதுதான். மேலும் வாழ்வதற்கு தேவையான பிராண வாயுவை (Oxygen) உற்பத்தி பண்ணும் தொழில்நுட்பத்தை கண்டு பிடிப்பதாகும். அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார். இருந்தும் அமெரிக்கா அரசாங்கம் அந்த ஆராய்ச்சியை மேலும் தொடர விரும்பவில்லை.
ஆனால் ஸ்ரீதர் அவர்கள் தான் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை கைவிடாமல் வேறு ஆக்கப்பூர்வமான முறையில் உபயோகிக்க விரும்பினார். அதற்காக அல்லும் பகலும் உழைத்து கண்டுப்பிடித்தது தான் நமக்கான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் தொழில்நுட்பமாகும்.
இம்முறையில் மின்சாரம் எப்படி தயாரிப்பது?
ஆக்சிஜனையும் எரிசக்தியையும் நேர்மின்வாய் (Anode) மற்றும் எதிர்மின்வாய் (Cathode) வழியாக செலுத்தி குறிப்பிட்ட வெப்பத்திற்கு உட்படுத்தினால் மின்சாரம் தயாராகும்.
இந்த மின்சாரத்தை தயாரிக்க மிக பெரிய அளவில் இயந்திர தொழில்நுட்பம் தேவைபடுவதால், அதன் உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது. ஆனால் கம்ப்யூட்டரைப் போல இதன் விலை மிகவும் குறைய அதிக வாய்ப்பியிருக்கிறது.
இந்த முறையில் தயாரிக்கும் மின்சாரத்தால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒரு பாக்ஸ் கிட்டத்தட்ட 10 - 12 அடி உயரமிருக்கும். இந்த ஒரு பாக்ஸின் மூலம் இந்தியாவில் 8 வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியும்.
இந்த தமிழருக்கு நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.