தமிழக நதிகளை இணைப்பது குறித்து, திரு வி.பொன்ராஜ் அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை
தமிழக
நீர்வழிகள் சாலைத் திட்டம் புதுமையாக முன்மொழியப் பட்டுள்ளது. இது நீர் சேகரிப்பாகவும் வெள்ளக்
கட்டுப்பாட்டு அமைப்பாகவும் இணைந்து செயல்படுகிறது. இருவழிகளில்
நீர் செல்லவும் ஆற்றுப் படுகைகளுக்கிடையில் ஏற்கனவே உள்ள அமைப்புகளின்
மீது, பாதிப்பின்றி இணைப்புகளை மேற்கொள்கிறது.
பின்வரும்
அணைகளை இணைக்கிறது: சாத்தனூர்,
மேட்டூர், பவானி சாகர், வைகை,
மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு. அத்துடன் பல ஏரிகளையும் பூண்டி,
சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம், ராமநாதபுரம் ஏரிகளையும் இணைக்கிறது.
மேற்கு
நோக்கி பாயும் ஆறுகளும் தமிழக
நீர்வழி கிரிடில் இணைக்கப்படுகிறது. ஒரே கிடைமட்டத்தில் வரும்படியாக
இது கடல் மட்டத்துக்கு மேல்
250 மீட்டர் உயரத்தில் கட்டப்படும். இணைப்பின் எந்தப் பகுதியிலிருந்தும், நீரை
ஏற்றவோ, இறக்கவோ முடிகிற வகையில்
அணைகளையும், ஏரிகளையும் இது இணைக்கிறது. ஆறுகள்
முழுவதுமே, தமிழக நீர்வழிப் பாதையுடன்
இணைக்கப்படுகின்றன.
இந்த
திட்டத்தை, ஐந்து கட்டங்களாக நடைமுறைப்படுத்த
முடியும்.
- முதல் கட்டத்தில், மேட்டூரும், வைகையும், 350 கி.மீ., நீள நீர்வழியால் இணைக்கலாம்.
- இரண்டாம் கட்டத்தில், மேட்டூரையும், பாலாறையும், 270 கி.மீ., தூரத்தில் இணைக்கலாம்.
- மூன்றாம் கட்டத்தில், 130 கி.மீ., நீள வழியில், வைகையையும், தாமிரபரணியையும் இணைக்கலாம்.
- நான்காம் கட்டத்தில், தாமிரபரணியையும், பெருஞ்சாணியையும் இணைக்கலாம்.
- ஐந்தாம் திட்டமாக, சம காலத்தில், ஆறுகளையும், ஏரி, -துணை ஆறுகளையும், ஆங்காங்கே இணைக்க வேண்டும்.
இந்த
திட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இது, அந்தந்த படுகைகளில்
பயன்படுத்தப்படும் நீரை இணைப்பதில்லை; மாறாக
உபரி நீரைமட்டுமே இணைக்கிறது. அதுவும், இரு வழிகளில் இணைக்கிறது.
இதில் எங்கும், நீரேற்றும் வசதி பயன்படுத்தப்படவில்லை.
பலன்கள்
திறமையான
வெள்ளக் கட்டுப்பாடு; 75 லட்சம் ஹெக்டேருக்கு நீர்ப்பாசன
வசதி; 2,150 மெகாவாட் நீர்மின்சக்தி; நிலத்தடி நீர் மட்ட உயர்வால்,
ஆண்டுக்கு, 1,350 மெகாவாட் மின்சக்தி மிச்சமாதல்; சரக்குப் போக்குவரத்துக்காக, 900 கி.மீ., நீள
நீர்வழித்தடம்; 30 அடி ஆழமும், 360 அடி
அகலமும் உள்ள நீர்வழியில், ஆண்டு
முழுக்க போக்குவரத்து நடக்கலாம்; சாலைகளோடு ஒப்பிடுகையில், நீர்வழிப் போக்குவரத்துக்கான எரிபொருளில், 90 சதவீதம் மிச்சமாகும்; அத்துடன்
நீர்வழி கிரிடிலிருந்து, 5 கோடி பேருக்கு, நேரடி
குடிநீர் இணைப்பைச் சாத்தியமாக்கலாம்; மீன்வளர்ப்பு, சுற்றுலா, நீர் விளையாட்டுகள் என,
பல கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன.
நன்றி: தினமலர்