விநாயகர் சுவாமியை இருகரம் கூப்பி வணங்கிவிட்டு அப்புறம் தோப்புக்கரணம் போடும் பழக்கம் நம் தமிழர்களிடையே பழங்காலம் முதல் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. நாமும் நம்முடைய பெரியவர்கள் சொன்னதை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே பின்பற்றி வருகிறோம் அல்லவா...
இந்த பழக்கத்தைத்தான் மேற்கு உலகம் இப்பொழுது சூப்பர் ப்ரைன் யோகா (Super Brain Yoga) என்று அழைக்கிறது. இதற்காக பல ஆராய்ச்சிகளை பண்ணி இப்பழக்கம் நம் மூளையில் உள்ள செல்களை தூண்டி நம் நினைவாற்றலை பன்முகப்படுத்துகிறது என்று கண்டறிந்து உள்ளார்கள். இதைத்தான் நம் ஆசிரியர்கள் தம்முடைய மாணவர்களுக்கு தண்டனை என்ற பெயரில். செய்ய சொன்னார்கள். நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சமயம் இந்த தண்டனையை அனுபவித்து இருப்போம். அப்பொழுது இதை மிகவும் அசிங்கமாக எண்ணி கூனி குறுகி இருப்போம். இது யாருடைய தவறு? அப்பொழுதே நம் ஆசிரியர்கள் அதற்கான விளக்கத்தை கொடுத்து இருந்தால் நாம் இதை ஒரு யோகாவாக செய்ய பழகி இருப்போம். இப்பவும் இது ஒன்றும் தாமதமில்லை நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து ஒரு பழக்கமாக கொண்டு வருவோம்.
இதை எப்படி செய்வது?
- இடது கையை கொண்டு வலது காதை படத்தில் உள்ளது போன்று பிடித்துக் கொள்ள வேண்டும். கட்ட விரல் வெளிப்புறம் (முன்னாடி தெரிவது மாதிரி) இருக்க வேண்டும்; ஆள் காட்டி விரல் உட்புறம் இருக்க வேண்டும்.
- வலது கையை கொண்டு இடது காதை பிடித்துக்கொள்ள வேண்டும். இடது கை உள்புறமாகவும் வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும்.
- இவ்வாறு காது மடலை பிடித்துக்கொண்டு முட்டியை மடித்து உட்கார்ந்து (குத்த வைப்பது போன்று) எழுந்திருக்க வேண்டும். இது மாதிரி 10 முதல் 20 முறை செய்ய வேண்டும்.
- இவ்வாறு செய்வதற்கு முன்பு நாம் நம்முடைய கால்களை தோள்பட்டை அளவுக்கு அகற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
- முக்கியமாக உட்காரும் பொழுது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்; எழுந்திருக்கும் பொழுது மூச்சை வெளியில் விடவேண்டும்.
நம் உடம்பில் உள்ள 7 சக்கரங்களில் முதல் சக்கரம் மூலாதாரம் சக்கரம் ஆகும். இது நம்முடைய ஆற்றலின் மையப்பகுதியாகும். இப்பயிற்சியை செய்வதன் மூலம் நம்முடைய மூலாதார சக்தியை எழுப்பி அதை ஆக்கினைக்கு கொண்டு வந்து மனதை ஒருநிலை படுத்த முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய படிக்கும் திறன் மற்றும் நினைவாற்றல் திறனை அதிகரிக்க முடியும்.
அல்ஸைமர் (Alzheimer) மற்றும் ஆட்டிசம் (Autism) போன்ற நோய்களை கட்டுப்படுத்தவும் , குறைக்கவும் இப்பயிற்சி உதவும்.
நம்முடைய மூளையை மேலிருந்து பார்க்கும் பொழுது அது இரண்டு பாகங்களாக தெரியும்.
இடது பக்கமுள்ள மூளை நம்முடைய வலதுபுற உடல் உறுப்புக்களை கட்டுப்படுத்தும் அதுபோல் வலது மூளை இடப்புறம் உள்ள உடல் உறுப்புக்களை கட்டுப்படுத்தும். அதனால் நம்மில் பலர் இடக்கை பழக்கமுள்ளவர்களாக இருப்பதை பார்க்கலாம்.
நம் காதுக்குள் காக்லியா என்ற பாகம் உள்ளது, அது நம்முடைய உடலை சமநிலைப்படுத்தும். அப்பகுதியில் ஏதாவது பிரச்சனை என்றால் நமக்கு தலைசுற்றல் வாந்தி போன்ற உபாதைகள் வரும். நாம் இப்பயிற்சியின் மூலம் இதை சரி செய்யலாம்.
அது மட்டுமல்லாமல் நம்முடைய காது மடல் நாம் நம் தாயின் கருவறையில் இருப்பது போன்ற தோற்றத்தை கொண்டதாகும். அதாவது தலை கீழ்புறமாகவும் கால் மேற்புறமாகவும் உள்ள அமைப்பாகும்.
ஆகையால் நம்முடைய காது மடலை குறிப்பிட்ட அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடல் உறுப்புக்களை சரியான விகிதத்தில் வேலை செய்ய வைக்கலாம். அதற்கு ரிஃப்ளெக்ஸ்லாஜி (Reflexology) என்று பெயர்.
நம்முடைய சம்பிரதாயத்தில் குழந்தைக்கு ஒரு வயது ஆனபின்பு காது குத்தும் பழக்கம் உள்ளது, அது ஏன் தெரியுமா?