Tuesday, March 28, 2017

சிறுதானியங்கள்



பொதுவாக பின்வரும் தானியங்கள் சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகிறது.. அவையாவன தினை, கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம், வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி.

கம்பு உடம்புக்கு தெம்பு 
சாமை உண்டால் ஆமை வயது 
திணை இதயத்திற்கு துணை 
வரகு உண்டால் வருங்காலம் வரவு 
குதிரை பலம் பெற குதிரைவாலி 
கேழ்வரகு சர்க்கரையே விலகு 
சோம்பல் நீக்கும் சோளம் 
பனிவரகு புற்று நோயே விலகு 

இந்த சிறுதானியங்களை வைத்து என்ன மாதிரியான உணவுகளை தயாரிக்கலாம்?

தினை அரிசியை பயன்படுத்தி  இட்லி, தோசை, பாயாசம் பண்ணலாம். சோளத்திலிருந்து சோளப்பணியாரம், தோசை செய்யலாம். கேப்பையிலிருந்து கஞ்சி, அடை பண்ணி சாப்பிடலாம். வரகரிசி சாதம் மாதிரி சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். கம்பு கூழ், கஞ்சி சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. 

பொதுவாக சிறுதானியங்களில் இரும்பு சத்து அதிகமிருக்கும். புரதம் மற்றும் கால்சியம் அளவும் கூடுதலாகவே அமைந்திருக்கும். இதில் பீனாலிக்ஸ் என்ற மருத்துவ குணப்பொருட்கள் மிகுதியாக காணப்படும். இது நம்முடைய உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். 





சிறுதானியங்கள் மழை குறைவான பகுதியில் வளரக்கூடியது. இது நம் மாநிலத்திற்கு (தமிழ் நாடு) ஏற்ற பயிராகும்.

Wednesday, February 8, 2017

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை

  1. நேர்மையாக இருப்பது அந்த நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது 
  2. பொது இடங்களில் தன்னால் யாருக்கும் எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்று கவனமாக இருப்பது 
  3. பொது இடங்களில், பயணங்களில் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது 
  4. தாய்மொழியை நேசிப்பது, தாய்மொழியிலே குழந்தைக்கு பேர் வைப்பது 
  5. ஒழுங்கு முறையில் வரிசையாக நின்று பேரூந்து மற்றும் இரயிலில் ஏறி பயணிப்பது; இறங்குபவர்களுக்கு முதலில் வழிவிட்டு பின்பு தான் ஏறுவது 
  6. வெளியூர் மக்கள் உதவி கேட்கும்பொழுது மனமுவந்து செய்வது 
  7. தனக்கான உணவை பெரும்பாலும் தானே சமைத்து அளவோடு உண்பது 
  8. எஸ்கலேட்டர் மற்றும் படிக்கட்டுகளில் போகும்போது ஓரமாக நின்று அவசரமாக போவோருக்கு வழிவிடுவது 
  9. அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வது கூடுமானவரை பொது போக்குவரத்தை பயன்படுத்துவது 
  10. அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் வருவது; சளைக்காமல் வேலை செய்வது; தங்கள் பணியை நேசித்து செய்வது 
நாமும் இதை கடைபிடிக்கலாமே.....!

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத பொன்மொழிகள்

  1. வைகறையில் துயில் எழு 
  2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 
  3. நீரை உண் உணவை குடி 
  4. உணவும் மருந்தும் ஒன்றே 
  5. படுக்கை காபி படுக்கையில் தள்ளும் 
  6. பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே 
  7. அஜீரணமும் மலச்சிக்கலும் ஆதி நோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள் 
  8. சர்க்கரையும் உப்பும் விஷமாகும் 
  9. சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார் 
  10. சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும் 
நாமும் கடைபிடித்து நோயின்றி சிறப்பாக வாழ்வோம்!

Tuesday, January 31, 2017

ஜாதிக்காய்


ஜாதிக்காயின் (Nutmeg) தாவரப்பெயர் மிருஷ்டிகா ப்ராக்ரன்ஸ் (Myristica fragrans) என்று அழைக்கப்படும். இது உறைப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டதாகும். இதில் விதை பகுதி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. மருத்துவ குணத்திற்கு அதில் பொதிந்துள்ள வேதிப்பொருள்கள் காரணம் ஆகும். இது பொதுவாக பீனோலிக்ஸ் (Phenolics) மற்றும் லிக்னான்ஸ் (Lignans) வகையை சேர்ந்ததாகும்.


மருத்துவ பலன்கள் 
  1. விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். 
  2. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
  3. வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்தை போக்கும். இதற்கு ஜாதிக்காய்,, சுக்கு தூள் சம அளவு, சீரகம் இரண்டு பங்கு எடுத்து பொடி செய்து உணவுக்கு முன் மூன்று சிட்டிகை அளவு சாப்பிட வேண்டும்.
  4. ஒரு சிட்டிகை அளவு சாதிக்காய் தூளை 1 டம்ளர் பசும்பாலில் கலந்து இரவில் பருகினால் மன அழுத்தம் குறைந்து சீரான தூக்கம் ஏற்படும்.