Wednesday, June 6, 2018

பவள மல்லிகை (பாரிஜாதம்)


பவளமல்லி சிறுமர வகையை சார்ந்த தாவரமாகும். இதனை பாரிஜாதம் என்றும் அழைப்பார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த தாவரம் பல நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. குறிப்பாக வழுக்கை அல்லது பூச்சி வெட்டுதல்,  அதிகப்படியான நரம்பு வலி (Sciatica), மூலம், குடற்புழுக்களை வெளியேற்றல் மற்றும் மலச்சிக்கலுக்கு அருமருந்தாகும். இதன் தாவரவியல் பெயர் நிக்டன்தெஸ் ஆர்போர்டிரிஸ்டிஸ் (Nyctanthes arbor-tristis), ஓலியேசியே (Oleaceae) குடும்பத்தை சேர்ந்ததாகும். 

இதன் இலை, மரப்பட்டை(Bark), விதை அனைத்தும் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. 

விதை - தண்ணீர் விட்டு அரைத்து விழுது போல் எடுத்து தலையில் தடவி வந்தால் வழுக்கை குணமாகும். 

இலை - கசாயம் செய்து 5 - 10 மிலி குடித்து வந்தால் அதிகப்படியான நரம்பு வலி (Sciatica) குணமாகும். குடற்புழுக்களை வெளியேற்றவோ அல்லது மலச்சிக்கலுக்கோ 10 - 15 மிலி அருந்த வேண்டும். 

மரப்பட்டை - ஆஸ்துமா நோயுக்கு மரப்பட்டை பொடியை (1 - 2 கி) வெற்றிலை சாறுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

அனைத்து மருத்துவ குணநலன்களுக்கும் இதில் உள்ள ஈறிடாய்டு க்ளைக்கோசைடு (Iridoid glycosides) என்ற மருத்துவகுண கலவைகளே காரணமாகும். அவையாவன பின்வருமாறு 




நிபா வைரஸ் (NiV) தொற்று நோய் முதன்முதலில் மலேசியாவில் கெம்பங் சுங்காய் என்ற இடத்தில் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது வௌவால் மூலம் பரவும் நோயாகும். வௌவால் கடித்த பழங்களை (பேரீச்சம் பழம்) சாப்பிடுவதால் இந்த நோய் பரவுகிறது. இது மனிதர்களையும் விலங்குகளையும் தாக்குகிறது. முக்கியமாக பன்றிகளையும், குதிரைகளையும் தாக்குகிறது. நோயின் அறிகுறிகள் பொதுவாக காய்ச்சல், மூச்சு திணறல், மூளை காய்ச்சல் ஏற்படும். இது எளிதில் பரவக்கூடிய உயிர் கொல்லி நோயாகும். இதற்கு இதுவரை தடுப்பு ஊசி கண்டுபிடிக்க படவில்லை.


நிபா வைரஸ் நோயிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தினமும் (1 வாரம்) பவளமல்லி கசாயத்தை ஒரு வேளை அருந்தி வந்தால் நல்லது. நோய் கண்டவர்கள் தினமும் 3 வேளை அருந்த வேண்டும்.

கசாயம் செய்யும் முறை 

பவளமல்லி இலை 5 - 6 எடுத்து 200 மிலி தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும். தண்ணீரின் அளவு 100மிலி ஆக வரும்வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்பு ஆற வைத்து, வடிகட்டி அதனுடன் 4 அல்லது 5 சொட்டு எலுமிச்சை பழச்சாறை சேர்த்து பருக வேண்டும்.

Thursday, March 29, 2018

பூவரசு


சிறுவயதில் பூவரசு மரத்தின் இலையை சுருட்டி பீப்பீ ஊதி விளையாடி திரிந்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது. அதுபோல், கிராமங்களில் பெண்கள் மார்கழி மாதம் அதிகாலையில் வீட்டிற்கு முன்பு சாணம் கரைத்து நீர் தெளித்து, கோலம் போடுவார்கள். பிறகு அந்த கோலத்தின் நடுவில் மாட்டு சாணத்தை உருட்டி பிள்ளையார் பிடித்து அதில் பூவரசு மரத்தின் பூவை வைத்து கோலத்தின் நடுவில் வைப்பார்கள். அதை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். 

இந்த மரத்தின் தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா [Thespesia populnea (L)].

பூவை ஏன் வைத்தார்கள் என்பது தெரியாது ஆனால் இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை மற்றும் பட்டை அனைத்தும் மருத்துவ குணம் உடையது.

இலை, பூ - பொதுவாக விஷத்தை முறிக்கும் தன்மையுடையது. அதனால் சித்த மருத்துவர்கள் இதன் இலை மற்றும் பூவை பூச்சிக்கடி, விஷ வண்டுக்கடிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்குக்கு பற்று போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காய் - பூவரசு காயை இடித்து சாறு பிழிந்தால் லேசான பிசுபிசுப்புடன் மஞ்சள் நிறத்தில் பால் போன்று சாறு வரும். இதை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் மறைந்து போகும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும். கை கால் மூட்டு வலிக்கு அருமருந்தாகும்.

பட்டை - பூவரசு மரத்தின் வேர் பட்டையை எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த 50 மிலி தண்ணீருடன் 10 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதி உண்டாகும். இதன் மூலம் தோல் நோயிலிருந்து விடுதலை பெறலாம். செதில் செதிலாக உதிரக்கூடிய சோரியாசிஸ் நோய்க்கு பூவரசம் பட்டை நல்ல மருந்தாகும்.

பூவரசு காய், செம்பருத்தி பூ, பழுத்த பூவரச இலை, இவற்றை சேர்த்து அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு புண் ஏற்பட்டால் ஆறவே ஆறாது. இதற்கு பூவரசு பட்டை சிறந்த மருந்தாகும். பட்டையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து பிறகு ஆறிய பின்பு அந்த தண்ணீரை ஊற்றி கழுவி வர புண் குணமாகும்.

ஞாபகம் மறதி நோயுக்கும் இது நல்ல மருந்தாகும்.

இத்தனை நோயுக்கும் அருமருந்தாகும் இந்த மரத்தில் பின்வரும் மருத்துவ குண வேதிப்பொருட்கள் உள்ளன. இது செஸ்க்யூடெர்பின் (Sesquiterpenes) என்ற வகையை சேர்ந்தது. 




பூவரசு மரம் அதிக அளவு பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்றாகும்.

பூவரசு
டாக்டர் சிவராமன்

Monday, January 1, 2018

கழற்சிக்காய்


கழற்சிக்காய் பொதுவாக காடுகளில் வளரக்கூடியது. நம் நாட்டில் வேலியோரங்களிலும், புதர்களிலும் காணப்படும் ஒரு கொடி ஆகும். இக்கொடியில் முட்கள் நிறைந்திருக்கும். இதன் காய்க்குள் இருக்கும் விதை வைரத்தைப் போன்று மிகவும் கடினமாக இருக்கும். இதன் விதை பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. அவை 
  1. காய்ச்சலைக் குறைக்கும்.
  2. மலேரியா காய்ச்சலுக்கு அருமருந்தாகும்.
  3. கல்லீரல், மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும்
  4. சர்க்கரை நோயுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
உபயோகிக்கும் முறைகள்:

கழற்சிக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதை (பருப்பு) யை உடைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கால் தேக்கரண்டி பொடியுடன் சிறிது பெருங்காயம், அரை டம்ளர் மோர், கொஞ்சம் உப்பு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 48 நாள் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும், வயிற்றுப புண்கள் ஆறும், வாயுவை வெளித்தள்ளும்; விரைவாதம் குணமாகும். 

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இது மிகவும் முக்கிய மருந்தாகும்.

4 பங்கு அளவு கழற்சிக்காய் விதைப்பொடி 1 பங்கு மிளகுப்பொடி எடுத்து நன்கு கலந்து ஒரு புட்டியில் போட்டு வைத்துக்கொள்ளவும். இதிலிருந்து தினமும் 1 தேக்கரண்டி அளவு 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். கர்ப்பப்பை பிரச்சனைகளையும் குணமாக்கும் வல்லமை உடையது.

யானைக்கால் நோயுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம். உடம்பில் எதிர்ப்பு சக்தியை வளர்க்கக் கூடியது.

இத்தனை மருத்துவக் குணங்களுக்கும் காரணம் இதில் பொதிந்துள்ள மருத்துவக் குணப்பொருட்கள் ஆகும், அவை



கழற்சிக்காய் குணங்கள்