Wednesday, August 2, 2017

தமிழர்கள் அறிவு - பித்தகோரஸ் தேற்றம் (Pythagoras Theorem) முன்னோடி



பித்தகோரஸ் ஒரு கிரேக்க விஞ்ஞானி மற்றும் கணிதமேதை ஆவார். இவர் வாழ்ந்த காலம் கி.மு.  570 - கி.மு. 495 ஆகும். இவர்தான் முக்கோணவியலின் முன்னோடி, இவர் கண்டுபிடித்தது தான் பித்தகோரஸ் தேற்றம் என்று அழைக்கப்படும். 

ஆனால் இவர் பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னரே கோதையனார் என்பவர் முக்கோணவியலின் தத்துவத்தை பாடலாக எழுதியுள்ளார். அந்த பாடல் 

ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறாக்கி 
கூறதில் ஒன்றைத் தள்ளி 
குன்றத்தில் பாதி சேர்த்தால் 
நீட்டிய கர்ணந் தானே!
- கோதையனார் 

இதன் பொருள்:

முக்கோணத்தின் கர்ணம் கண்டுப்பிடிக்க, நீளத்தை எட்டால் வகுத்து, கிடைப்பதை நீளத்தில் கழித்து, செங்குத்து உயரத்தில் பாதியை இதோடு சேர்த்தால் கர்ணம் கிடைக்கும்.

உதாரணம்


மேலே உள்ள முக்கோணத்தின் நீளம் 8; உயரம் 6; இதன் கர்ணம் எத்தனை? 

நீளத்தை எட்டால் வகுத்தால் கிடைப்பது 1, இதை நீளத்தில் கழித்தால் 8 - 1 = 7; இத்துடன் உயரத்தில் பாதியை சேர்த்தால் 7 + 3 = 10; இதுதான் கர்ணத்தின் அளவு ஆகும்.

இதை பித்தகோரஸ் சூத்திரத்தின் மூலம் கண்டுபிடிக்கலாம் 


இதன் மூலம் நம்முடைய பெருமையை நாம் உணரலாம். 

Tuesday, August 1, 2017

இக்காலத்து திரௌபதி - ஒரு ஆச்சரியம்


ரஜோ வர்மா (வயது 23) மிகவும் ஆச்சரியப்படுத்திய பெண் ஏனென்றால் இவர் 5 சகோதர்களை மணந்து கொண்டவர். இவர் டெஹ்ராடூன் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார். 


இனிய குடும்பம்: கணவர்கள் (புஜ்ஜு வர்மா (35), சந்த் ராம் வர்மா (31), கோபால் வர்மா (29), குட்டு வர்மா (24), தினேஷ் வர்மா (22) 

இச்செய்தியை காணும் பொழுது நமது இதிகாசம் மகாபாரதம் திரௌபதியை தான் நினைவூட்டுகிறார். மகாபாரதம் போற்றுவதற்கு உரியது என்றால் ரஜோ வர்மா செய்ததும் சரியே!

ஆனால் இதற்கு முக்கிய காரணம், இக்கிராமத்தில் ஆண்கள் பெண்கள் விகிதம் சரி சமமாக இல்லை. இங்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதே அரிது. மேலும் இவர்கள் குடும்பம் சகிதமாக சிறு சிறு நிலப்பரப்பில் விவசாயம் செய்து பிழைப்பவர்கள். அதனால் விளைநிலங்களை பிரிக்காமல் ஒன்றாக சேர்ந்து விவசாயம் செய்வார்கள். இக்கிராமத்தில் பல குடும்பங்களில் இதுபோல் ஒரு பெண் 2 அல்லது 3 சகோதர்களை திருமணம் செய்து குடித்தனம் பண்ணுவது சகஜமாக இருக்கிறது.



இவர்களுக்கு அழகான ஒரு குழந்தை உள்ளது. ஒரே ஒரு நெருடல் என்னவென்றால் இக்குழந்தையின் உண்மையான தந்தை யார் என்று தெரியவில்லை, இதை ரஜோ வர்மாவே சொல்லியிருப்பது தான்.

இக்குடும்பம் வாழ்க பல்லாண்டு!!

Thursday, July 27, 2017

ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (APJ Abdul Kalam) நினைவுகள்


நினைவு நாள்: 27-07-2017 (இரண்டாவது வருடம்) 

திரு அப்துல் கலாம் அவர்களின் சில பொன்மொழிகள்  

கனவு காணுங்கள் 
ஆனால் கனவு என்பது 
நீ தூக்கத்தில் காண்பது அல்ல 
உன்னை 
தூங்க விடாமல் 
பண்ணுவது எதுவோ 
அதுவே (இலட்சிய) கனவு!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் 
ஆனால் ...
நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

வாழ்க்கை என்பது 
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள் 
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள் 
ஒரு இலட்சியம் - சாதியுங்கள் 
ஒரு சோகம் - தாங்கிக் கொள்ளுங்கள் 
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள் 
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

Wednesday, July 26, 2017

தமிழும் அறிவியலும்


சூரிய உதயமும் தமிழ் மாதங்களும் 

                                         சித்திரை 1
                                                          ஆடி 1
                                                                   ஐப்பசி 1
                                                                                தை 1

இந்த தேதிகளை விழாவாக கொண்டாடுவது நம் தமிழர் பாரம்பரியம்

ஏன் தெரியுமா?

இதன் பின்பு அறிவியல் ஒளிந்து இருக்கிறது 

நாம் சூரியன் உதிப்பது "கிழக்கு" திசை என்றும் மறைவது "மேற்கு" திசை என்றும் பள்ளிகளில் படித்திருப்போம். ஆனால் முழுவதும் உண்மையில்லை ........ஏனென்றால் பூமி 23.44 டிகிரி சாய்வாக தன்னைத்தானே சுற்றுகிறது மற்றும் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. அதனால் சூரியன் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே துல்லியமாக கிழக்கு திசையில் உதித்து மேற்கு திசையில் மறையும். மற்ற நாட்களில் பூமியின் சுழற்சி காரணமாக சூரிய உதயம் கொஞ்ச கொஞ்சமாக வடகிழக்கு திசை நோக்கி நகரும், குறிப்பிட்ட தூரம் போனபின்பு மறுபடியும் கிழக்கு திசை நோக்கி வரும். 

அதுபோல சூரிய உதயம் கொஞ்ச கொஞ்சமாக தென்கிழக்கு திசை நோக்கி நகரும், குறிப்பிட்ட தூரம் போனபின்பு மறுபடியும் கிழக்கு திசை நோக்கி வரும். இவ்வாறு நடப்பதற்கு ஒரு ஆண்டு ஆகிறது.

அதாவது

சூரியன் சரியாக கிழக்கு திசையில் உதிப்பது சித்திரை 1 ஆம் தேதி ஆகும். 
             
சூரியன் சரியாக வடகிழக்கு திசையில் உதிப்பது ஆடி 1 ஆம் தேதி ஆகும்.
             
சூரியன் மறுபடியும் கிழக்கு திசையில் உதிப்பது ஐப்பசி 1 ஆம் தேதி ஆகும்.
             
சூரியன் சரியாக தென்கிழக்கு திசையில் உதிப்பது தை 1 ஆம் தேதி ஆகும்.

சித்திரை 1 - தமிழ் புத்தாண்டு (Equinox)
ஆடி 1 - ஆடி பிறப்பு , ஆடி பெருக்கு (Summer Solstice; Longest path) 
ஐப்பசி 1 - தீபாவளி, ஐப்பசி பிறப்பு (Equinox)
தை 1 - பொங்கல், தை பிறப்பு (Winter Solstice; Shortest path)

இந்த வானியல் மாற்றங்கள், அது சார்ந்த பருவ நிலை மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள். அதனால் இதையெல்லாம் மூடநம்பிக்கை என்று ஒதுக்காமல் அதன் அறிவியல் உண்மையை உணர்ந்து இச்செய்தியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்ப்போம். 

Friday, June 30, 2017

சாம்பிராணி



தமிழ்நாட்டில் சாம்பிராணியின் உபயோகம் பலவாக உள்ளது. பொதுவாக நம் வீட்டில் பூஜையின் போது சாம்பிராணி புகை போடும் பழக்கம் உள்ளது, அதுபோல் குழந்தைகள் குளித்த பின்பு தாய்மார்கள் சாம்பிராணி புகை போடுவார்கள். 

இவ்வாறு செய்வதினால் என்ன பயன்கள்?
  1. சாம்பிராணி மிகச்சிறந்த வாசனை பொருள்; இதன் புகை நம்முடைய மனத்தை சாந்தப்படுத்துகிறது, அதனால் தெய்வ வழிப்பாட்டில் மிகவும் உபயோகிக்கப்படுகிறது 
  2. குழந்தைகளுக்கு சளி பிடிப்பதை தவிர்க்கிறது, அதனால்தான் குழந்தை குளித்த பின்பு சாம்பிராணி புகை காட்டப்படுகிறது.
  3. சித்த மருத்துவத்தில் வாத நோய்க்கு அருமருந்தாகும். சாம்பிராணியை நல்லெண்ணெயில் நன்றாக காய்ச்சி தேய்த்து வந்தால் வாத நோய் குணமாகும். 
  4. ஆயுர்வேத மருத்துவத்தில் சளியால் ஏற்படும் தலைவலியை குணமாக்க உதவுகிறது. ஏலக்காய், மஞ்சள், சாம்பிராணி, வாய்விளங்கம் மற்றும் நாயுருவி விதை, இந்த ஐந்து பொருட்களையும் நன்கு இடித்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு வெள்ளை துணியில் இட்டு பென்சில் போல் சுருட்டிக்கொள்ள வேண்டும். ஒருமுனையில் 1 அல்லது 2 சொட்டு நல்லெண்ணெய் விட்டு கொளுத்த வேண்டும்; எரியும் பொழுது தீயை அணைத்துவிடவும். அப்பொழுது புகை அதிகம் வரும், அந்த புகையை சுவாசித்தால் சளியுடன் கூடிய மூக்கடைப்பு போய் தலைவலி நிற்கும்.
சாம்பிராணியில் உள்ள மருத்துவகுணப் பொருட்கள்