Tuesday, April 26, 2016

அம்மா + அப்பா வார்த்தையின் சிறப்பு

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247
உயிர் எழுத்துக்கள் - 12
மெய்யெழுத்துக்கள்  - 18
உயிர்மெய்யெழுத்துக்கள் - 216
ஆயுத எழுத்து - 1

உயிர்மெய்யெழுத்துக்களை மேலும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
வல்லினம் - க ச ட த ப ற 
மெல்லினம் - ங ஞ ண ந ம ன  
இடையினம் - ய ர ல வ ழ ள


அம்மா = அ + ம் + மா = உயிர் எழுத்து + மெய்யெழுத்து + உயிர்மெய்யெழுத்து 
அப்பா = அ + ப் + பா = உயிர் எழுத்து + மெய்யெழுத்து + உயிர்மெய்யெழுத்து

பெற்றோர்கள், கருவில் உயிரையும் மெய் என்ற உடலையும் கொடுத்து, வளர்த்து உயிர்மெய்யாகிய குழந்தையை ஈன்றெடுக்கிறார்கள். இதில் அம்மாவின் பங்கு அளப்பரியது. அதனால்தான் குழந்தை பெற்றோர்களை அம்மா அப்பா என்று அர்த்தத்தோடு கூப்பிடுகிறது.


அம்மா என்ற சொல்லில் வரும் "ம" மெல்லினம் வகையை சார்ந்தது, ஆகவே அம்மா மென்மையான மனம் படைத்தவராக இருக்கிறார்.

அப்பா என்ற சொல்லில் வரும் "ப" வல்லினம் வகையை சார்ந்தது. ஆகவே அப்பா கண்டிப்புடன் நடந்து கொள்வதுபோல் காண்பித்துக் கொள்கிறார்.

ஆகையால் தமிழை தாய் மொழியாக கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அம்மா அப்பா என்று கூப்பிட கற்று கொடுங்கள்.

Sunday, April 17, 2016

ஓம் (AUM)


இந்து தர்மத்தில் கூறுவது என்னவென்றால் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் காரியங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் தொழிலாகும். அதுபோல் "ஓம்" மந்திரத்திலுள்ள அகார, உகார, மகாரங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிக்கும்.

ஓம் என்று ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம் உதிர்க்கும் "அ" என்ற ஒலி சுவாச அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் "உ" மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் "ம" தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஓம் என்ற ஒலிப்பதன் மூலம் பிராண ஆற்றல் உடல்  முழுவதும் பாய்கிறது. இதை ஆராய்ச்சியாளர் அனில் குர்ஜர் உடல்கூறு மருத்துவ சோதனை மூலம் நிரூபித்துள்ளார். இவரது ஆராய்ச்சின் முடிவில் "ஓம்" என்று ஒலிப்பதின் மூலம் கீழ்கண்ட பயன்கள் ஏற்படுவதை கண்டறிந்துள்ளார்.
  1. மன அழுத்தம் குறைகிறது 
  2. கவனக்குவிப்பு அதிகரிக்கிறது 
  3. உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது.

மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸும், சுவாதிதானத்தில் 288 ஹெர்ட்ஸும், மணிபூரகத்தில் 320 ஹெர்ட்ஸும், அனாகதத்தில் 341.3 ஹெர்ட்ஸும், விசுத்தியில் 384 ஹெர்ட்ஸும், ஆக்கினையில் 426.7 ஹெர்ட்ஸும், துரியத்தில் 480 ஹெர்ட்ஸும் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்துள்ளது.

OM (AUM) Chant Effect
ஓங்காரம் - சுவாமி வேதாத்திரி மகரிஷி
SPB OM Chanting

Sunday, April 3, 2016

பழைய சோறு



பழைய சோற்றின் பயன்கள்
  1. இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது 
  2. உடல் சோர்வை போக்கி உற்சாகமான மனநிலையை தருகிறது. 
  3. உடலிலுள்ள அணுச்சிதைவுகளை தடுக்கிறது.
  4. பழைய சாதத்தில் வைட்டமின் பி 6, பி 12 நிறைய இருக்கிறது.
  5. சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ஏகப்பட்ட நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.
  6. காலையில் பழைய சோற்றை சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடல் சூடு தணியும். குடல்புண், வயிற்றுவலி குணமாகும்.
  7. நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் வராது.
  8. இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
  9. பழைய சாதத்துடன் இரண்டு சின்ன வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி மேலும் அதிகரிக்கும்.
  10. அலர்ஜி, அரிப்பு போன்றவை குணமாகும்.
  11. 100 கி சாதத்தில் 3.4 மி.கி அளவு இரும்பு சத்து உள்ளது அதுவே பழைய சோற்றில் இரும்பு சத்து அளவு அதிகரித்து 73.9 மி.கி உள்ளது.
எப்படி தயாரிப்பது?
நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார் ...!