ஜாதிக்காயின் (Nutmeg) தாவரப்பெயர் மிருஷ்டிகா ப்ராக்ரன்ஸ் (Myristica fragrans) என்று அழைக்கப்படும். இது உறைப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டதாகும். இதில் விதை பகுதி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. மருத்துவ குணத்திற்கு அதில் பொதிந்துள்ள வேதிப்பொருள்கள் காரணம் ஆகும். இது பொதுவாக பீனோலிக்ஸ் (Phenolics) மற்றும் லிக்னான்ஸ் (Lignans) வகையை சேர்ந்ததாகும்.
மருத்துவ பலன்கள்
- விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.
- இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
- வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்தை போக்கும். இதற்கு ஜாதிக்காய்,, சுக்கு தூள் சம அளவு, சீரகம் இரண்டு பங்கு எடுத்து பொடி செய்து உணவுக்கு முன் மூன்று சிட்டிகை அளவு சாப்பிட வேண்டும்.
- ஒரு சிட்டிகை அளவு சாதிக்காய் தூளை 1 டம்ளர் பசும்பாலில் கலந்து இரவில் பருகினால் மன அழுத்தம் குறைந்து சீரான தூக்கம் ஏற்படும்.
1 comment:
அருமை
Post a Comment