Sunday, October 15, 2017

கர்ம வீரர் காமராசர் மந்திரிசபை


பெருந்தலைவர் திரு காமராசர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக 3 முறை இருந்துள்ளார்.

முதல் முறை: ஏப்ரல் 13, 1954 - மார்ச் 30, 1957
இரண்டாவது முறை: ஏப்ரல் 1, 1957 - மார்ச் 1, 1962
மூன்றாவது முறை: மார்ச் 3, 1962 - அக்டோபர் 2, 1963

திரு ராஜாஜி அவர்களுக்கு பிறகு (ஏப்ரல் 10, 1952 - ஏப்ரல் 12, 1954) திரு காமராசர் அவர்கள் முதன்முறையாக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இரண்டாவது முறை 5 ஆண்டுகள் முழுவதுமாக பதவியில் இருந்து மிகச்சிறப்பாக பணியாற்றினார். மூன்றாவது முறை 1.5 வருடம் மட்டுமே முதல்வராக இருந்தார். அதன் பின்பு கட்சி பணிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 1964 முதல் 1967 வரை இருந்துள்ளார்.


திரு காமராசர் அவர்கள் இரண்டாவது முறை முதல்வராக இருந்த பொழுது தன்னையும் சேர்த்து மொத்தம் 8 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை அமைத்தார். இந்த அமைச்சர்கள் அனைவரும் மிக சிறந்த திறமைசாலிகள் மற்றும் நேர்மையானவர்கள். இவர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் மிகச் சிறந்த பொற்கால ஆட்சியை கொடுத்தார். 

இந்த ஆட்சியில் தான் எண்ணற்ற திட்டங்கள் தமிழ் நாட்டில் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், அணைகள் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இன்றளவும் பேர் பெற்று நிற்கின்றன. இப்பொழுது வரை பெருந்தலைவர் ஆட்சியை தான் எல்லோரும் பொற்கால ஆட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்,

இவருடைய அமைச்சரவையில் திரு U கிருஷ்ணாராவ் அவர்கள் சபாநாயகராகவும், திரு B பக்தவத்சல நாயுடு அவர்கள் துணை சபாநாயகராகவும் பணியாற்றி உள்ளார்கள்.

கவர்னர்களாக 3 பேர் இருந்துள்ளார்கள். திரு AJ ஜான், திரு PV ராஜமன்னார், திரு பிஷுராம் மேத்தி போன்றவர்கள் ஆவர்.


பெருந்தலைவர் பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்து அதிக மாணவர்கள் படிப்பறிவு பெற ஊன்றுகோலாக விளங்கினார். அதனால்தான் திரு காமராசர் அவர்களை கல்விக்கு கண் கொடுத்த கடவுளாக மக்கள் போற்றுகின்றனர்.

காமராசர் என்றாலே எளிமை - நேர்மை - கனிவு 

வாழ்க காமராசர் புகழ்!

No comments: