Tuesday, October 17, 2017

இந்திய ரூபாயின் குறியீடு


அமெரிக்கா (💲), இங்கிலாந்து (£), ஐரோப்பிய ஒன்றியம் (€), ஜப்பான் (¥) போன்ற நாடுகளில் இருக்கும் பணத்திற்கு குறியீடு இருப்பது போல் இந்திய ரூபாய்க்கும் குறியீடு வேண்டும் என்று திரு மன்மோகன் சிங் தலைமையில் ஆன காங்கிரஸ் அரசாங்கம் மார்ச் 5, 2009 அன்று இந்தியா முழுவதுக்குமான ஒரு போட்டியை அறிவித்தது. அப்போது நிதி மந்திரியாக இருந்த திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் குறியீடு நம் இந்திய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.

இப்போட்டியில் இந்தியா முழுவதும் 3331 பேர் கலந்து கொண்டார்கள். அவர்களில் இருந்து 5 பேர் உடைய வடிவமைப்பு  மட்டும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.


படத்தில் இருப்பவர்கள் ஷாரூக் J ஈரானி, KK சிபின், நந்திதா கோரியா மெஹரோத்ரா, D உதயக்குமார், ஹிதேஷ் பத்மஷாலி. இவர்கள் தான் அந்த 5 பேர்.

இவர்கள் வடிவமைத்த ரூபாய் குறியீடுகள் 


இந்த குறியீடுகளில் திரு உதயக்குமார் வடிவமைத்த ரூபாய் குறியீடு தான் வெற்றி பெற்றது. இந்த அறிவிப்பை இந்திய அரசாங்கம் ஜூலை 15, 2010 அன்று வெளியிட்டது.


போட்டியில் கலந்து கொள்ளும்போது உதயக்குமார் IIT மும்பை முதுகலை மாணவர், தற்போது IIT கவுகாத்தியில் இணை பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த ரூபாய் குறியீட்டுக்கு இவர் கொடுத்த விளக்கம் 


No comments: