Showing posts with label Long live. Show all posts
Showing posts with label Long live. Show all posts

Saturday, May 6, 2017

நீடித்த ஆயுளுடன் வாழ

நாம் சில பழக்க வழக்கங்களை ஒழுங்காக கடைப்பிடித்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

அது என்ன?   


               தினம் இருமுறை
                               வாரம் இருமுறை
                                                மாதம் இருமுறை
                                                                 வருடம் இருமுறை

நம் வாழ்வில் சில விடயங்களை மேலே சொன்னபடி இருமுறை மட்டுமே கடைப்பிடித்து வந்தால் நீடித்த ஆயுளுடன் வாழலாம். 

அவை எவை எவை .................

தினம் இருமுறை - நாம் தினமும் இரண்டு வேலை மலம் கழிக்க வேண்டும். மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலே பல நோய்களுக்கு மூல ஆதாரமாகும்.

வாரம் இருமுறை - நாம் அனைவரும் வாரம் இரண்டு தடவை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். 


ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்ப்பது என்பது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து பின்பு வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். முக்கியமாக ரொம்ப நேரம் ஊற வைக்கக் கூடாது, அதனால் நமக்கு சளி பிடிக்கும்.

மாதம் இருமுறை - திருமணத்திற்கு பிறகு மாதம் இரண்டு முறை தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இருமுறை என்பது அடுத்தடுத்த இரண்டு நாட்கள் இல்லை. கண்டிப்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே.

வருடம் இருமுறை - வருடத்திற்கு இரண்டு தடவை வயிறை சுத்தம் செய்ய வேண்டும். 

வயிறை சுத்தம் செய்வது என்றால் எப்படி?

பேதிக்கு மருந்து சாப்பிட வேண்டும். அதிலும் ஒரு முறையிருக்கு, அதன்படி செய்ய வேண்டும். பேதி மருந்து சாப்பிடுவதற்கு 4 நாட்களுக்கு முன்னரே நம்மளை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். 

எப்படி?  

நாம் ஞாயிற்று கிழமை பேதி மருந்து எடுத்துக் கொள்ள போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நம்முடைய தயாரிப்பு புதன் கிழமையே தொடங்கி விடவேண்டும். புதன் கிழமை எப்பவும் போல உணவு எடுத்துக் கொள்ளலாம். வியாழக்கிழமை வேகவைத்த காய்கறிகளை மட்டுமே உண்ண வேண்டும். வெள்ளிக்கிழமை பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். சனிக்கிழமை பழச்சாறு மட்டுமே குடிக்க வேண்டும். அப்புறம் ஞாயிற்றுக்கிழமை பேதி மருந்து எடுத்துக்கொண்டு ஒன்றும் சாப்பிடக் கூடாது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் அன்று இரவு பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம். இதே முறையைத்தான் மருந்து சாப்பிட்ட பின்பும் கடைபிடிக்க வேண்டும். அதாவது மறுநாள் (திங்கள் கிழமை) பழச்சாறு எடுத்து கொள்ளணும், செவ்வாய் கிழமை பழங்கள் சாப்பிட வேண்டும். புதன் கிழமை வேகவைத்த காய்கறிகள் சாப்பிடணும். வியாழக்கிழமை முதல் எப்பவும் போல் உணவு எடுத்து கொள்ளலாம். 

இதுவே தான் உபவாசத்திற்கும் பொருந்தும்.

நாம் அனைவரும் நம்மை இவ்வாறு பழக்கப் படுத்திக் கொள்வோமே .........

Friday, May 6, 2016

சித்தர்கள் அருளியுள்ள மூச்சு கணக்கு


தமிழ் மொழியால் நம்முடைய ஆயுள் நீளும் என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம் என்று சித்தர்கள்  கூறுகிறார்கள், எப்படி?

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில், ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு x ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள், நாழிகை ஒன்றுக்கு 360 மூச்சு (15 x 24) எனச் சித்தர்களால் வகுப்பப்பட்டுள்ளது. இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது. 

ஒரு மணி நேரத்திற்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21600 மூச்சு வீதம் ஓடுகிறது. 

இதற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? இந்த கேள்வி உங்கள் மனதில் எழலாம், அதற்கான பதில்....

இந்த 21600 மூச்சுக்களை குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூட்டினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஓடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், உடலுறவு மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் ஒரு நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறையும்.

தமிழ் வயிற்று மொழி அல்ல; நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாழ்க்கை நெறிமொழி!