சித்த மருத்துவத்தில் சிறுநீர் சோதனை பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்....
காலையில் எழுந்தவுடன் கழிக்கும் சிறுநீரை ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டு உற்றுப் பாருங்கள்.
- எண்ணெய் துளி பாம்பு போல் நெளிந்து காணப்பட்டால் உங்களுக்கு வாதம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
- எண்ணெய் துளி மோதிரம் போல் வட்டமாக காணப்பட்டால் உங்களுக்கு பித்தம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
- எண்ணெய் துளி முத்து போல் அப்படியே நின்றால் உங்களுக்கு கபம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
அதுபோல்
- எண்ணெய் துளி வேகமாக சிறுநீரில் பரவினால் நோய் விரைவில் குணமாகும்
- எண்ணெய் துளி அப்படியே நின்றால் நோய் குணமாகத் தாமதமாகும்.
- எண்ணெய் துளி கீழே அமிழ்ந்தால் நோய் குணமாகாது என்று புரிந்து கொள்ளலாம்.
இதுமாதிரி சிறுநீரின் நிறம் மற்றும் மணம் ஆகியவற்றின் மூலம் நோயின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.