கழற்சிக்காய் பொதுவாக காடுகளில் வளரக்கூடியது. நம் நாட்டில் வேலியோரங்களிலும், புதர்களிலும் காணப்படும் ஒரு கொடி ஆகும். இக்கொடியில் முட்கள் நிறைந்திருக்கும். இதன் காய்க்குள் இருக்கும் விதை வைரத்தைப் போன்று மிகவும் கடினமாக இருக்கும். இதன் விதை பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. அவை
- காய்ச்சலைக் குறைக்கும்.
- மலேரியா காய்ச்சலுக்கு அருமருந்தாகும்.
- கல்லீரல், மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும்
- சர்க்கரை நோயுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
உபயோகிக்கும் முறைகள்:
கழற்சிக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதை (பருப்பு) யை உடைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கால் தேக்கரண்டி பொடியுடன் சிறிது பெருங்காயம், அரை டம்ளர் மோர், கொஞ்சம் உப்பு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 48 நாள் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும், வயிற்றுப புண்கள் ஆறும், வாயுவை வெளித்தள்ளும்; விரைவாதம் குணமாகும்.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இது மிகவும் முக்கிய மருந்தாகும்.
4 பங்கு அளவு கழற்சிக்காய் விதைப்பொடி 1 பங்கு மிளகுப்பொடி எடுத்து நன்கு கலந்து ஒரு புட்டியில் போட்டு வைத்துக்கொள்ளவும். இதிலிருந்து தினமும் 1 தேக்கரண்டி அளவு 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். கர்ப்பப்பை பிரச்சனைகளையும் குணமாக்கும் வல்லமை உடையது.
யானைக்கால் நோயுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம். உடம்பில் எதிர்ப்பு சக்தியை வளர்க்கக் கூடியது.
இத்தனை மருத்துவக் குணங்களுக்கும் காரணம் இதில் பொதிந்துள்ள மருத்துவக் குணப்பொருட்கள் ஆகும், அவை