Friday, November 25, 2016

எட்டு போடு

எட்டு போட்டால் நோய் விட்டு போகும் 


இது ஒரு நடை பயிற்சி !

நம்முடைய வீட்டில் முன்னாடி எல்லாம் நம் பெற்றோர்கள் ஒரு எட்டு போயிட்டு வா என்று சொல்லி கேள்விப் பட்டிருப்போம். அதனுடைய அர்த்தம் இதுதான் .....

இந்த பயிற்சி பண்ணுவதற்கு 10 அடி இடம் தேவைப்படும். இதை வீட்டிலோ அல்லது வெட்ட வெளியிலோ பண்ணலாம். படத்தில் உள்ளது போல் எட்டு வடிவத்தில் குறித்துக்கொண்டு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சியை ஒரு நாளைக்கு இரு வேளை செய்ய வேண்டும்., குறைந்தது 30 நிமிடம் பண்ண வேண்டும். முதல் 15 நிமிடம் தெற்கிலிருந்து வடக்காகவும் அடுத்த 15 நிமிடம் வடக்கிலிருந்து தெற்காகவும் நடக்க வேண்டும். 

இப்பயிற்சியை முறையாக செய்து வந்தால் நம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து நம்முடைய ஐம்புலன்களும் நன்றாக வேலை செய்யும். 

பயிற்சியை செய்து பலன் பெறுங்கள்!

Figure 8 walking exercise
Figure 8 walking exercise - Video
Figure 8 walking exercise - Video

Tuesday, October 4, 2016

யோஷினோரி ஓசுமி (Yoshinori Ohsumi) - நோபல் பரிசு 2016 (மருத்துவம்)


யோஷினோரி ஓசுமி, 2016 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுகிறார். இவருடைய ஆராய்ச்சி மனித உடலில் செல்கள் எவ்வாறு பிரிகிறது? தன்னுள் அமைந்துள்ள பொருட்களை எப்படி மறுசுழற்சி செய்துகொள்கிறது என்று ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பின் மூலம் புற்றுநோய், பார்க்கின்சன், நீரழிவு போன்ற நோய்களுக்கான காரணம் மற்றும் அதற்கான நிவாரணம் குறித்து அறிந்து கொள்ள முடியும்.   

இவருடைய ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் ஈஸ்ட்டை (Yeast) பயன்படுத்தி தன்னைத்தானுண்ணல் (Autophagy) செயல்முறையை கண்டுபிடிப்பது மற்றும் அதனுடைய (ATG) குறியீட்டு மரபணுக்களை (Genes) அடையாளம் காண்பது அதன்மூலம் நோய்க்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்துவது என்பதாகும். அதில் இவர் வெற்றியும் கண்டுள்ளார்.





வாழ்த்துக்கள்!

Tuesday, September 27, 2016

கற்பூரவள்ளி


கற்பூரவள்ளி சித்த மருத்துவத்தில் "கற்ப மூலிகை" என்று அழைக்கப்படும். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இந்த மருத்துவ பயன்களுக்கு காரணம் அதில் பொதிந்துள்ள வேதிப்பொருட்களே ஆகும். இவை டெர்பினாய்ட்ஸ் (Terpenoids) என்ற வகையை சேர்ந்ததாகும்.


சித்தர்கள் அகத்தியர் மற்றும் தேரையர் இந்த மூலிகையை பற்றி பாடல்களாக வடித்துள்ளனர். அவை 

காச இருமல் கதித்தம சூரியயையம் 
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் வீசுசுரங் 
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு 
(அகத்தியர் குணபாடம்)   

கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே 
(தேரையர் குணபாடம்)  

குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். அப்போது கற்பூரவள்ளி இலையை பிழிந்து சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு (Palm Sugar) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் குணமாகும்.


இம்மூலிகை காச நோய்க்கு அருமருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறெடுத்து அதனுடன் தேன் (Honey) கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறையும்.

ஆகையால் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதனுடைய மருத்துவ பயனை அடைவோம்.

Sunday, September 25, 2016

பொன் முட்டையிடும் வாத்து

மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதல்வர் திரு ஜெயலலிதா அவர்கள் 22-09-2016 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 10.15 க்கு சேர்க்க படுகிறார். 

  
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இரவு 1.00 மணிக்கு முதல்வர் அவர்களின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடுகிறது. இதை கேட்டவுடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் இரவு 1.05 மணி முதல் மருத்துவமனை முன்பு திரளாக குவிகிறார்கள். அவர்கள் அனைவரும் அன்று இரவு மற்றும் மறுநாள் முழுவதும் மருத்துவமனை கதவின் முன்பு காத்திருக்கிறார்கள். கடவுளின் அருளால் நமது முதல்வர் உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கிறார்.


படம்: நன்றி விகடன்

நமது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பாசத்தை கண்டவுடன் உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு. இதே பாசத்தை நமது விவசாயிகளிடமும், மக்களிடமும் காண்பித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவர்களுக்கு தெரியாத என்ன? நமது முதல்வர் அவர்கள் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் "பொன் முட்டையிடும் வாத்து" என்று! முதல்வர் மட்டும் இல்லையென்றால் அமைச்சர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் "செல்லா காசு"!

வாழ்க நமது அமைச்சர்களின் அளப்பரிய சேவை!

மக்கள் மத்தியில் இன்னொறு விதமான எண்ண ஓட்டமும் உள்ளது. இந்த காய்ச்சல் உண்மையான காய்ச்சலா? இல்லை சொத்து குவிப்பு வழக்கில் வரும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன்னாடியே ஏற்படுத்திக் கொண்ட நாடகக் காய்ச்சலா? அல்லது உண்மையிலேயே முதல்வர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாரா?

ஆண்டவனுக்கே வெளிச்சம்!!

நம் மதிப்பிற்குரிய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

Friday, September 23, 2016

இந்திய தொழிற்நுட்பக் கல்லூரிகள் (IITs)


இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 8 மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்திய தொழிற்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழிற்நுட்பக் கல்லூரிகள் இல்லாத மாநிலங்கள் பின்வருமாறு 

1) அருணாசலப் பிரதேசம்
2) ஹரியானா  
3) மணிப்பூர் 
4) மேகாலயா 
5) மிசோரம் 
6) நாகலாந்து 
7) சிக்கிம் 
8) திரிபுரா