Sunday, April 3, 2016

பழைய சோறு



பழைய சோற்றின் பயன்கள்
  1. இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது 
  2. உடல் சோர்வை போக்கி உற்சாகமான மனநிலையை தருகிறது. 
  3. உடலிலுள்ள அணுச்சிதைவுகளை தடுக்கிறது.
  4. பழைய சாதத்தில் வைட்டமின் பி 6, பி 12 நிறைய இருக்கிறது.
  5. சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ஏகப்பட்ட நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.
  6. காலையில் பழைய சோற்றை சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடல் சூடு தணியும். குடல்புண், வயிற்றுவலி குணமாகும்.
  7. நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் வராது.
  8. இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
  9. பழைய சாதத்துடன் இரண்டு சின்ன வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி மேலும் அதிகரிக்கும்.
  10. அலர்ஜி, அரிப்பு போன்றவை குணமாகும்.
  11. 100 கி சாதத்தில் 3.4 மி.கி அளவு இரும்பு சத்து உள்ளது அதுவே பழைய சோற்றில் இரும்பு சத்து அளவு அதிகரித்து 73.9 மி.கி உள்ளது.
எப்படி தயாரிப்பது?
நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார் ...! 

Saturday, January 30, 2016

கறிவேப்பிலை

கறிவேப்பிலை மரத்திற்கு கறிவேம்பு என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இம்மரத்தின் அனைத்து பாகங்களும் (இலை, பட்டை, வேர்) மருத்துவத்திற்கு பயன்படுகிறது.  கறிவேப்பிலையை நாம் தினமும் சமையலுக்கு உபயோகிக்கிறோம் ஏனெனில் அதில் அதிக நோய் எதிர்ப்பு காரணிகள் உள்ளன. 


கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முராயா கோனிகி (Murraya koenigii) என்று அழைக்கப்படும். இது ரூட்டேசியே (Rutaceae) என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் மருத்துவ குணத்திற்கு அதில் பொதிந்துள்ள பல மருத்துவ குண வேதிப்பொருட்கள் காரணம் ஆகும், அவை கரொட்டினாய்ட்ஸ் (Carotinoids - Lutein; Carotenes), அல்க்லாய்ட்ஸ் (Alkaloids - Carbazole alkaloids), வைட்டமின்கள், மணம் தரக்கூடிய டேர்பின்ஸ் (Terpenes) மற்றும் பல.





கறிவேப்பிலையை தினமும் பச்சையாக சாப்பிட்டால் வரும் பயன்கள்:

நீரழிவு நோய் 

நீரழிவு நோய் கண்டவர்கள் தினமும் 10 கறிவேப்பிலையை பச்சையாக காலை மாலை என 3 மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும். மேலும் இந்நோயால் உடல் பருமனாவதும் தவிர்க்கப்படும். சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும் மற்றும் கண் பார்வை குறைபாடு உண்டாகும். இதை சரி செய்வதற்கு கறிவேப்பிலையை நிழலில் காய வைத்து பொடி செய்து கஷாயம் பண்ணி காலை மாலை என இரு வேளை குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக வைத்திருக்க உதவும்.

கொழுப்பு சத்து 

கொழுப்பில் நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என இரு வகைப்படும். நம் உடம்பில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமானால் அது இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீர் கோளாறுகளை உண்டு பண்ணும்.

காலையில் 15 கறிவேப்பிலையை பச்சையாக 3 மாதம் சாப்பிட்டால் வயிற்றை சுற்றியுள்ள  கொழுப்பு சத்து குறைந்து பார்ப்பதற்கு அழகான உடல் பொலிவு ஏற்படும். நம் உடம்பில் கொழுப்பு சத்து ஏற்பட முக்கிய காரணம் நாம் தற்சமயம் உபயோகப்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகும். அதனால் எண்ணெய் உபயோகப்படுத்தும் முன்பு 1 லிட்டர் சமையல் எண்ணெயில் 10 கறிவேப்பிலையை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயிலுள்ள கொழுப்பு சத்து நீங்கும்.

இரத்தச்சோகை 

இரத்தச்சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் பேரீச்சம் பழத்துடன் கறிவேப்பிலையை சேர்த்து உண்டால் இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் அதிகமாகி இரத்தச்சோகை நீங்கும்.

நரைமுடி 

கறிவேப்பிலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வந்தால் நரைமுடி வராது மேலும் முடி உதிர்தலையும் தடுத்து நிறுத்தும்.  

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம் ..?

கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் (Lipophilic compounds) முழுமையாக உடலில் சேரும். கறிவேப்பிலையை தாளிக்கும்போது இளஞ்சூடான எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள மோனோ டேர்பீன்ஸ் ஆவியாகி பலன் கிடைக்காமல் போய் விடும். 

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்பு சத்தும் (Calcium), இரும்பு சத்தும் (Iron) அதிக அளவு நிறைந்துள்ளன.

தமிழ்நாடு மாநில குறியீடுகள் (State Symbols of Tamil Nadu)

இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.



ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான மாநில குறியீடுகள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் குறியீடுகள் பின்வருமாறு 






Friday, January 29, 2016

இப்படியும் திருவிழா கொண்டாடுவார்களா?

திருவிழாவின் பெயர் கானமார மாட்சூரி (Kanamara Matsuri) என்பதாகும். ஜப்பானில் இவ்விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு தமிழிலில் "ஆண்குறி விழா" என்று அழைக்கப்படுகிறது (Festival of Steel Phallus or Penis festival). இவ்விழாவின் முக்கிய நோக்கம் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பணம் சேகரிப்பதாகும். இவ்விழா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் ஞாயிறு கிழமையில் கொண்டாடப்படும். இவ்விழாவை ஆண் பெண் இரு பாலாரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.



இதன் வரலாறு மிக சுவையானது. ஜப்பானில் ஒரு அழகிய பெண் இருந்தாள். அவள் மீது கூரிய பற்களை உடைய அரக்கன் ஆசைப்பட்டு அவளுடைய பெண் உறுப்பில் ஒளிந்து கொள்கிறான். அவளுக்கு திருமணம் நடக்கிறது. அந்நாள் இரவில் அவளுடைய கணவனின் ஆண் உறுப்பை அரக்கன் கடித்து குதறி விடுகிறான். இவ்வாறு இருமுறை நடைபெறுகிறது, அதனால் கோபமுற்ற அப்பெண் கொல்லரிடம் இரும்பினாலான ஆண் உறுப்பை செய்து கொடுக்கும்படி கேட்கிறாள். அதன்படி கொல்லரும் செய்து கொடுக்கிறார். அதை அவள் உபயோகிக்கும் பொழுது அரக்கனின் பல் உடைந்து விடுகிறது. அதன்பின் அப்பெண் வேறு திருமணம் செய்து சந்தோஷமாக இருப்பதாக கதை முடிகிறது.



இத்திருவிழாவில் ஆண் உறுப்பை போன்ற மிட்டாய்களை விரும்பி சுவைக்கிறார்கள்.

இத்திருவிழாவினால் ஜப்பானுக்கு ஒவ்வொரு வருடமும் சுற்றுலா வருவாய் அதிகரித்து கொண்டேயிருக்கிறது.

ப்ளூம் பாக்ஸ் (Bloom Box)

ப்ளூம் பாக்ஸ் (Bloom Box) என்றால் என்ன?

நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது யார்? நாமெல்லாம் பெருமையாக சொல்லக்கூடிய தமிழர் திரு கே ஆர் ஸ்ரீதர் அவர்கள் தான்.


அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் (Illinois University) பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்குள்ள நாசா (NASA) வில் வேளையில் அமர்ந்தார். அங்கு அவர்க்கு கொடுக்கப்பட்ட வேலையானது, செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா? என கண்டறிவதுதான். மேலும் வாழ்வதற்கு தேவையான பிராண வாயுவை (Oxygen) உற்பத்தி பண்ணும் தொழில்நுட்பத்தை கண்டு பிடிப்பதாகும். அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார். இருந்தும் அமெரிக்கா அரசாங்கம் அந்த ஆராய்ச்சியை மேலும் தொடர விரும்பவில்லை. 

ஆனால் ஸ்ரீதர் அவர்கள் தான் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை கைவிடாமல் வேறு ஆக்கப்பூர்வமான முறையில் உபயோகிக்க விரும்பினார். அதற்காக அல்லும் பகலும் உழைத்து கண்டுப்பிடித்தது தான் நமக்கான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் தொழில்நுட்பமாகும்.

இம்முறையில் மின்சாரம் எப்படி தயாரிப்பது?

ஆக்சிஜனையும் எரிசக்தியையும் நேர்மின்வாய் (Anode) மற்றும் எதிர்மின்வாய் (Cathode) வழியாக செலுத்தி குறிப்பிட்ட வெப்பத்திற்கு உட்படுத்தினால் மின்சாரம் தயாராகும். 


இந்த மின்சாரத்தை தயாரிக்க மிக பெரிய அளவில் இயந்திர தொழில்நுட்பம் தேவைபடுவதால், அதன் உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது. ஆனால் கம்ப்யூட்டரைப் போல இதன் விலை மிகவும் குறைய அதிக வாய்ப்பியிருக்கிறது.


இந்த முறையில் தயாரிக்கும் மின்சாரத்தால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒரு பாக்ஸ் கிட்டத்தட்ட 10 - 12 அடி உயரமிருக்கும். இந்த ஒரு பாக்ஸின் மூலம் இந்தியாவில் 8 வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியும்.

இந்த தமிழருக்கு நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.