திருவிழாவின் பெயர் கானமார மாட்சூரி (Kanamara Matsuri) என்பதாகும். ஜப்பானில் இவ்விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு தமிழிலில் "ஆண்குறி விழா" என்று அழைக்கப்படுகிறது (Festival of Steel Phallus or Penis festival). இவ்விழாவின் முக்கிய நோக்கம் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பணம் சேகரிப்பதாகும். இவ்விழா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் ஞாயிறு கிழமையில் கொண்டாடப்படும். இவ்விழாவை ஆண் பெண் இரு பாலாரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
இதன் வரலாறு மிக சுவையானது. ஜப்பானில் ஒரு அழகிய பெண் இருந்தாள். அவள் மீது கூரிய பற்களை உடைய அரக்கன் ஆசைப்பட்டு அவளுடைய பெண் உறுப்பில் ஒளிந்து கொள்கிறான். அவளுக்கு திருமணம் நடக்கிறது. அந்நாள் இரவில் அவளுடைய கணவனின் ஆண் உறுப்பை அரக்கன் கடித்து குதறி விடுகிறான். இவ்வாறு இருமுறை நடைபெறுகிறது, அதனால் கோபமுற்ற அப்பெண் கொல்லரிடம் இரும்பினாலான ஆண் உறுப்பை செய்து கொடுக்கும்படி கேட்கிறாள். அதன்படி கொல்லரும் செய்து கொடுக்கிறார். அதை அவள் உபயோகிக்கும் பொழுது அரக்கனின் பல் உடைந்து விடுகிறது. அதன்பின் அப்பெண் வேறு திருமணம் செய்து சந்தோஷமாக இருப்பதாக கதை முடிகிறது.
இத்திருவிழாவில் ஆண் உறுப்பை போன்ற மிட்டாய்களை விரும்பி சுவைக்கிறார்கள்.
இத்திருவிழாவினால் ஜப்பானுக்கு ஒவ்வொரு வருடமும் சுற்றுலா வருவாய் அதிகரித்து கொண்டேயிருக்கிறது.
No comments:
Post a Comment