Wednesday, February 8, 2017

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை

  1. நேர்மையாக இருப்பது அந்த நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது 
  2. பொது இடங்களில் தன்னால் யாருக்கும் எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்று கவனமாக இருப்பது 
  3. பொது இடங்களில், பயணங்களில் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது 
  4. தாய்மொழியை நேசிப்பது, தாய்மொழியிலே குழந்தைக்கு பேர் வைப்பது 
  5. ஒழுங்கு முறையில் வரிசையாக நின்று பேரூந்து மற்றும் இரயிலில் ஏறி பயணிப்பது; இறங்குபவர்களுக்கு முதலில் வழிவிட்டு பின்பு தான் ஏறுவது 
  6. வெளியூர் மக்கள் உதவி கேட்கும்பொழுது மனமுவந்து செய்வது 
  7. தனக்கான உணவை பெரும்பாலும் தானே சமைத்து அளவோடு உண்பது 
  8. எஸ்கலேட்டர் மற்றும் படிக்கட்டுகளில் போகும்போது ஓரமாக நின்று அவசரமாக போவோருக்கு வழிவிடுவது 
  9. அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வது கூடுமானவரை பொது போக்குவரத்தை பயன்படுத்துவது 
  10. அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் வருவது; சளைக்காமல் வேலை செய்வது; தங்கள் பணியை நேசித்து செய்வது 
நாமும் இதை கடைபிடிக்கலாமே.....!

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத பொன்மொழிகள்

  1. வைகறையில் துயில் எழு 
  2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 
  3. நீரை உண் உணவை குடி 
  4. உணவும் மருந்தும் ஒன்றே 
  5. படுக்கை காபி படுக்கையில் தள்ளும் 
  6. பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே 
  7. அஜீரணமும் மலச்சிக்கலும் ஆதி நோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள் 
  8. சர்க்கரையும் உப்பும் விஷமாகும் 
  9. சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார் 
  10. சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும் 
நாமும் கடைபிடித்து நோயின்றி சிறப்பாக வாழ்வோம்!

Tuesday, January 31, 2017

ஜாதிக்காய்


ஜாதிக்காயின் (Nutmeg) தாவரப்பெயர் மிருஷ்டிகா ப்ராக்ரன்ஸ் (Myristica fragrans) என்று அழைக்கப்படும். இது உறைப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டதாகும். இதில் விதை பகுதி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. மருத்துவ குணத்திற்கு அதில் பொதிந்துள்ள வேதிப்பொருள்கள் காரணம் ஆகும். இது பொதுவாக பீனோலிக்ஸ் (Phenolics) மற்றும் லிக்னான்ஸ் (Lignans) வகையை சேர்ந்ததாகும்.


மருத்துவ பலன்கள் 
  1. விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். 
  2. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
  3. வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்தை போக்கும். இதற்கு ஜாதிக்காய்,, சுக்கு தூள் சம அளவு, சீரகம் இரண்டு பங்கு எடுத்து பொடி செய்து உணவுக்கு முன் மூன்று சிட்டிகை அளவு சாப்பிட வேண்டும்.
  4. ஒரு சிட்டிகை அளவு சாதிக்காய் தூளை 1 டம்ளர் பசும்பாலில் கலந்து இரவில் பருகினால் மன அழுத்தம் குறைந்து சீரான தூக்கம் ஏற்படும். 

Monday, December 26, 2016

தாம்பூலம் மருத்துவ குணங்கள்


தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்ந்தது ஆகும். இதை ஆங்கிலத்தில் Betel leaf, betel nut and slaked lime (CaO + water) என்று சொல்வார்கள்.  

வெற்றிலை 
வெற்றிலையில் உள்ள மருத்துவ குண பொருட்கள் 

பாக்கு
பாக்கில் உள்ள மருத்துவ குண பொருட்கள்



சுண்ணாம்பு

(CaO + water) = Ca(OH)2

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் 
  1. டையாஸ்டேஸ் (Diastase) என்ற பொருள் வெற்றிலையில் அதிகம் உள்ளது. இது ஸ்டார்ச் போன்ற பொருளை செரிக்க உதவுகிறது.
  2. நம் வாயில் உமிழ்நீரை அதிகம் சுரக்க செய்கிறது. உமிழ்நீரில் உள்ள நொதிகள் கிருமி நாசினியாகவும், உணவை செரிமானம் பண்ணவும் உதவுகிறது.
  3. உடல் பருமனை குறைக்கவும் உதவி புரிகிறது. ஒரு வெற்றிலை உடன் சில மிளகு துண்டுகளை சேர்த்து 2 மாதங்கள் உண்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
  4. தாய்ப்பாலை சுரக்கவும் பயன்படுத்தப் படுகிறது. ஒரு இலையை எண்ணெயில் ஊற வைத்து மார்பகங்களின் வெளிப்புறத்தில் வைக்க வேண்டும்.
பாக்கின் மருத்துவ குணங்கள்
  1. மலச்சிக்கலை போக்கும். மலத்துவாரத்தில் உள்ள புண்களை குணப்படுத்தும்.
  2. பற்களில் கசியும் இரத்தத்தை போக்கும்.
சுண்ணாம்பின் மருத்துவ குணங்கள் 
  1. எண்ணெய் பதார்த்தங்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
  2. பாக்கில் உள்ள மருத்துவ குண பொருட்களை வெளிக்கொணர உதவுகிறது.
  3. ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது.
  4. பற்களை உறுதியுடன் வைத்துக் கொள்கிறது.
தாம்பூலம் பயன்படுத்தும் முறை

ஒரு பெரிய வெற்றிலையின் பின்புறத்தில் சிறிதளவு சுண்ணாம்பை தடவிக்கொள்ள வேண்டும். அதனுடன் மிகச்சிறிய அளவு பாக்கை சேர்த்து, மடித்து வாயில் வைத்து நன்றாக மென்று உமிழ்நீரை விழுங்க வேண்டும். தாம்பூலத்தில் உள்ள இந்த மூன்று பொருட்கள் நம் உடலில் உள்ள முக்குணமான வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சரியான விகிதத்தில் சமன் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.