Saturday, January 16, 2016

டெங்கு (டெங்கி) காய்ச்சல்

டெங்கு (டெங்கி) காய்ச்சல் (Dengue Fever), DENV என்று அழைக்கக்கூடிய வைரஸினால் ஏற்படக்கூடியது. இது நான்கு உள்வகை (Subtypes: DENV-1, DENV-2, DENV-3 & DENV-4) பிரிவுகளை உடையது. பொதுவாக இது ப்ளேவிவைரஸ் (Flavivirus) என்று அழைக்கக்கூடிய ப்ளேவிவிரிடே (Flaviviridae) குடும்பத்தை சேர்ந்தது. இக்காய்ச்சல் மலேரியாவைப்போல கொசுக்களினால் பரவக்கூடியது. இக்கொசு ஏடெஸ் இஜிப்டி (Aedes aegypti) என்று அழைக்கப்படுகிறது. இது  சுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.

டெங்கு (டெங்கி) காய்ச்சலுக்கு இதுவரை  ஆங்கில மருத்துவத்தில் மருந்து எதுவுமில்லை. பொதுவாக  எந்த வைரஸ் நோய்க்கும் மருந்து கிடையாது. ஆகவேதான் தடுப்பு மருந்து பிறந்தது முதல் கொடுக்கப்படுகிறது. பிறகு எப்படி சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்படுகிறது?


டெங்கு (டெங்கி) காய்ச்சல் ஆசியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் அதிக அளவு காணப்படுகிறது.


இக்கொசு, டெங்கு (டெங்கி) காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து இரத்தத்தை உறிஞ்சி உட்கொண்டு பின்பு சாதாரண நபர்களை கடிக்கும் பொழுது, கொசு இரத்தத்திலுள்ள வைரஸ், கடி படுபவரின் இரத்தத்தில் கலந்து விடுகிறது..


சித்த மருத்துவத்தில் டெங்கு (டெங்கி) காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் மிக அருமருந்தாகும். இது ஒன்பது மூலிகைகளை உள்ளடக்கியது.

நிலவேம்பு (Andrographis paniculata)
வெட்டிவேர் (Vetiveria zizanioides)
விலாமிச்சை வேர் (Plectranthus vettiveroides)
சுக்கு (Zingiber officinale)
மிளகு (Piper nigrum)
கோரைக்கிழங்கு (Cyperus rotundus)
சந்தனம் (Santalum album)
பற்படாகம் (Mollugo cerviana)
பேய்புடல் (Trichosanthes cucumerina)

சித்த மருந்து கடையில் நிலவேம்பு குடிநீர் பொடி கிடைக்கிறது. ஒரு தேக்கரண்டி அளவு பொடியை 200 மிலி அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு 50 மிலி வந்தவுடன் இதை வடிகட்டி 10 - 50 மிலி அளவு குடிநீரை பெரியவர்கள் குடிக்க வேண்டும். 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 15 மிலி அளவு குடிக்க வேண்டும். 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 5 - 10 மிலி அளவு குடிக்க வேண்டும். குடிநீர் தயாரித்த 3 மணி நேரத்தில் உபயோகித்து கொள்ள வேண்டும். நிலவேம்பு குடிநீரை சாப்பாட்டுக்கு முன் குடிப்பது மிகவும் சிறந்தது.

மூலப்பொருட்களின் நன்மைகள்:

நிலவேம்பு - முக்கிய மூலப்பொருள், காய்ச்சலை குணமாக்கும் வேதிப்பொருள் மிகுந்து இருக்கிறது, வைரஸ் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

கோரைக்கிழங்கு, பற்பாடகம் - காய்ச்சலை குணப்படுத்தும்.

பேய்ப்புடல் - குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும்.

சுக்கு, மிளகு - உடலில் சுரக்கும் நொதிகளை சீராக்கும்.

வெட்டி வேர், விலாமிச்சை வேர், சந்தனம் - ஜுரத்தால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும்.

Dengue Fever - Pitha Suram
NIS - Dengue & Chikun Gunya
WHO - Dengue Fever

No comments: