அகத்தை சீர் செய்யக்கூடிய பொருள் தான் சீரகம் ஆகும். இதனுடைய பூர்வீகம் எகிப்து நாடாகும். இதன் தாவரப் பெயர் Cuminum cyminum (Umbelliferae). சீரகத்தில் இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. இது நம் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் என்ற பொருளிலுள்ள ஹீமுடன் (Heme) இணைந்து பிராண வாயுவை உடல் முழுவதும் எடுத்து செல்கிறது.
இதில் டேர்பீன்ஸ் (Terpenes) என்று சொல்லக்கூடிய எஷன்ஷியல் ஆயில் (Essential oils) அதிக அளவு உள்ளது. பொதுவாக குமினால்டிஹைடு (Cuminaldehyde) மற்றும் தைமோல் (Thymol) என்ற மருத்துவ குணம் கொண்ட வேதிப்பொருள் அதிக அளவு உள்ளது. இது நம் வாயிலுள்ள உமிழ்நீர் சுரப்பி (Salivary glands) மற்றும் ஜீரண மண்டலத்தில் அமிலம் (Acids), காரம் (Bile), ஜீரண நொதிபொருளை (Digestive enzymes) சுரக்க தூண்டுகிறது.
ஒரு தேக்கரண்டி சீரகத்தை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து (பாத்திரத்தை மூடி) பின்பு குளிர வைத்து நாள் முழுவதும் குடித்து வந்தால் ஜீரண மண்டலத்தில் எந்த பிரச்சனையும் வராது. மேலும் நம் உடல் குளிர்ச்சி அடையும். சீரகத்தை
வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை
குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவை நீங்கி
விடும்.
சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும். ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து, கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு விரைவில் நிற்கும். மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
சீரகத்தை வறுத்து மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி சாப்பிட்டால் மந்தம் நீங்கும். முருங்கைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
சீரகத்தில் பல வகைகள் உள்ளன, அவை பெருஞ்சீரகம் (Fennel), சிறுஞ்சீரகம் (Caraway) மற்றும் கருஞ்சீரகம்.

பெருஞ்சீரகத்தின் தாவரப் பெயர் Foeniculum vulgare என்றும், சிறுஞ்சீரகத்தின் தாவரப் பெயர் Carum carvi என்றும் அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் Umbelliferae என்ற குடும்பத்தை சேர்ந்தது. பெருஞ்சீரகத்தில் Anethole என்ற வேதிப்பொருளும், சிறுஞ்சீரகத்தில் Carvone என்ற வேதிப்பொருளும் அதிக அளவு உள்ளன.
இப்பொருள்கள் அனைத்தும் நம் வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கும்.
No comments:
Post a Comment