Tuesday, January 12, 2016

தொட்டா சிணுங்கி (Mimosa pudica)



தொட்டா சிணுங்கி செடியின் இலையை தொட்டவுடன் அது உடனே மூடிக்கொள்ளும், கொஞ்ச நேரம் கழித்து தானாக திறந்து கொள்ளும். அதை பார்ப்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இந்த செயல் தொட்டா சிணுங்கி தாவரத்தின் தனி சிறப்பாகும். இதற்கு காரணம் தான் என்ன?

இச்செயலுக்கு காரணம், இத்தாவரத்தில் இருக்கும் இரண்டு மிக முக்கிய வேதிப்பொருளாகும், அவை 
  1. மிமோபுதின் (Mimopudine) 
  2. பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsate)
மிமோபுதின் (Mimopudine) என்ற வேதிப்பொருள் இலையை திறப்பதற்கும், பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsateஎன்ற வேதிப்பொருள் இலையை மூடுவதற்கும் உதவுகிறது.


மருத்துவ  குணங்கள்:

தொட்டா சிணுங்கி, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோய்களுக்கு அருமருந்தாகும். சர்க்கரை நோய்க்கு தோட்டா சிணுங்கி இலைச்சாறு 30 மி.லி. வீதம் காலை மாலை என்று இருவேளைக்கு இரண்டு மாதம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். இரத்த அழுத்தத்திற்கு 15 மி.லி. வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

தொட்டா சிணுங்கி செடியின் வேரை பொடி செய்து பாலில் கலந்து இரண்டு மாதம் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். தொட்டா சிணுங்கி செடி முழுவதையும் தண்ணீர் விட்டு அரைத்து (மாவு மாதிரி), அதை வெள்ளை துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி மற்றும் வீக்கம் குணமாகும். மாவு மாதிரி அரைத்ததை அப்படியே புண்ணில் தடவினால் நாள்பட்ட புண் குணமாகும்.

தூக்கமின்மை நோய்க்கும் இச்செடி நல்ல மருந்தாகும். 5.0 கிராம் அளவு இச்செடியின் இலையை கொதிக்க வைத்து இரவு நேரத்தில் 2 - 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நோய் (Insomnia) குணமாகும்.

ஃபினீயல் சுரப்பி vs தொட்டா சிணுங்கி

ஃபினீயல் சுரப்பி (Pineal Gland) பெருமூளையின் (Cerebrum) அடிப்பாகத்தில் அமைந்துள்ள நாளமில்லா சுரப்பியாகும் (Endocrine gland). இச்சுரப்பி மெலடோனின் (Melatonin) என்ற இயக்குநீரை (Hormone) சுரக்கிறது. இது நம் உடலில் உயிரியல் கடிகாரத்தை (Biological Clock) சீராக வைத்திருக்க உதவுகிறது. அதாவது, மெலடோனினின் வேலையானது ஒரு நாளில் மனிதனை இரவு - பகல் என்று அது அதுக்குரிய வேலையை செய்ய ஞாபகப்படுத்துகிறது (Circadian Rhythm). பொதுவாக தூங்கும் முறையை ஒழுங்கு படுத்துகிறது. இதன் அளவில் ஏதாவது பிரச்சனை என்றால் தூக்கம் வருவதிலும் பிரச்சனை வரும்.


சித்தர்கள் தங்கள் உடலை பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்வதற்கு இச்சுரபிதான் மிக முக்கிய காரணமாகும். பிரபஞ்ச சக்தியை ஆழ்நிலை தியானம் மற்றும் தவத்தின் மூலம் பெற்று பல வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள்.


அப்படியான ஆழ்நிலை தியானத்தின் போது இச்சுரபி "டைமெத்தில் ட்ரிப்டமைன் (N,N-dimethyltryptamine) என்ற வேதிப்பொருளை சுரக்கிறது. பொதுவாக இவ்வேதிப்பொருள்  உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பொருளாகும். ஏனென்றால் இதை உட்கொண்டால் நம் மனநிலையை ஏகாந்த நிலைக்கு கொண்டு செல்லும்.


இவ்வேதிப்பொருள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் திசுக்களை புதுப்பிக்கவும் உதவுவதாக விஞ்ஞானிகள் 2014 ஆம் ஆண்டு கண்டுபிடித்துள்ளார்கள். இவ்வேதிப்பொருள் இயற்கையாகவே தொட்டா சிணுங்கி செடியின் வேர் பகுதியில் நிறைந்துள்ளது. ஆகவே முறையாக இச்செடியின் வேர் பகுதியை சாப்பிட்டால் நமக்கு டைமெத்தில் ட்ரிப்டமைன் (N,N-dimethyltryptamine) குறைவில்லாமல் கிடைக்கும். இவ்வேதிப்பொருள் நம் உடலில் சேர்வதற்கு முன்பே சில நொதிப்பொருளின் (Enzyme) மூலம் ஜீரணம் ஆகி வெளியேறிவிடும். ஆகையால் முறையாக சாப்பிட வேண்டும்.

மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் தற்பொழுது உள்ள நுகர்வு கலாசாரத்தில் நாம் உபயோகிக்கும் பல பொருட்கள் இச்சுரபியை அழித்துக் கொண்டு வருகிறது. முக்கியமாக பற்பசையில் உள்ள ஃபுளோரைடு (Fluoride) வேதிப்பொருள் ஒரு காரணியாகும். இச்சுரபியானது ஃபுளோரைடு வேதிப்பொருளை தன்னிடத்தில் உறிஞ்சி கொள்வதனால் இதன் செயல்பாடு குறைந்து கொண்டே வருகிறது.

No comments: