Friday, May 6, 2016

கோபுரக்கலசம்

"கோயில் இல்லாத ஊரில் யாரும் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழியை நம் முன்னோர்கள் சொன்னதை கேள்விப் பட்டதுண்டா.....அது ஏன் என்று யோசித்ததுண்டா .....? 


கோயில்களையும், கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அது பற்றிய அறிவியல் உங்களுக்கு தெரியுமா..?

கோபுரக்கலசங்கள் பொதுவாக ஐம்பொன்களால் செய்யப் பட்டதாகும். இந்த கலசத்தில் கொட்டப்படும் தானியங்களும் மற்றும் உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்கு கொடுக்கிறது. தானியங்கள் என்று சொல்லும்போது அது நவதானியங்களைக் குறிக்கும், அவையாவன நெல், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு, சோளம், மக்காச்சோளம், எள் போன்றவற்றை குறிக்கும்.

இதில் வரகு தானியத்தை அதிகம் கொட்டினார்கள், ஏன் என்று தேடினால் விடை மிக ஆச்சரியம் தருவதாக இருக்கிறது. "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது.


இது மட்டும் தானா......இல்லை .......இன்னும் இருக்கிறது, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியங்களை நீக்கிவிட்டு புதிய தானியங்களை நிரப்புவார்கள்", அது ஏன் என்ற காரணத்தை தேடினால் அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு தானியங்கள் செயல் இழந்து விடுகிறது. 

கலசங்களில் தானியங்களை வைப்பதினால் மற்றொறு பயனும் இருந்தது, அந்த காலத்தில் மழை பெய்தால் குறைந்தது மூன்று மாதத்திற்கு விடாமல் பெய்யும். ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை. அதனால் கலசத்தில் இருக்கும் தானியத்தை எடுத்து மீண்டும் விதைக்கலாமே .....!

ஒரு இடத்தில் இடியோ அல்லது மின்னலோ தாக்கினால் அங்குள்ள மிக உயரமான இடத்தில் அமைந்த இடிதாங்கியே முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரை காப்பாற்றும் என்பது அதன் உயரத்தை பொறுத்தது. கோபுரக் கலசங்களே இடிதாங்கிகள் ஆகும். உதாரணமாக கோபுரத்தின் உயரம் 100 மீட்டர் என்றால் 200 மீட்டர் விட்டம் வரைக்குமான பரப்பளவில் எத்தனை பேர் இருந்தாலும் இடி தாக்காமல் காப்பாற்றப்படுவார்கள். அதாவது சுமார் 31400 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப் படுவார்கள். 

சில கோயில்களில் நான்கு வாயில்கள் இருக்கின்றன, அது நாலாபுறமும் 31400 சதுர மீட்டர் பரப்பளவை காத்து நிற்கிறது. இது ஒரு தோராய கணக்கு தான் .....எத்தனை பிரமிப்பு ....!!!

சும்மாவா சொன்னாங்க நம்ம பெரியவங்க....!!!

No comments: