Sunday, May 22, 2016

ஆயுர்வேதம்


தமிழ்நாட்டில் தற்பொழுது ஆறு வகையான மருத்துவ முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன அவை 
  1. தமிழர் மருத்துவ முறை (சித்த மருத்துவம்)
  2. ஆங்கிலேயர் மருத்துவ முறை (அலோபதி மருத்துவம்)
  3. ஆரியர் மருத்துவ முறை (ஆயுர்வேத மருத்துவம்)
  4. முகமதியர் மருத்துவ முறை (யுனானி மருத்துவம்)
  5. இயற்கை மருத்துவ முறை (இயற்கை மருத்துவம்)
  6. ஜெர்மானிய மருத்துவ முறை (ஹோமியோபதி மருத்துவம்)
ஆயுர்வேதத்திற்கு முதலாசிரியர்கள் தேவதாசர் (தன்வந்திரி), சிசிருதர் என்பவர்களே. இவர்கள் இருவரும் ஒரு காலத்தவர்கள். கி.மு 6000 ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள். சிசிருதர் தேவதாசரின் சிஷ்யர் ஆவார். 

ஆயுர்வேதமானது 100  அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொறு அத்தியாயமும் 100 சுலோகங்களால் அமைக்கப் பட்டிருக்கிறது. 

ஆயுர்வேதம் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை பின்வருமாறு 
  1. சல்லியம் (இரண வைத்தியம்)
  2. சாலக்கியம் (கழுத்துக்கு மேற்பட்ட வியாதிகள்)
  3. காயம் (மற்ற உடலின் வியாதிகள்)
  4. பூதம் (பிசாசு குணங்கள்)
  5. கௌமாரம் (குழந்தை வைத்தியம்)
  6. ஆகதம் (விஷங்களைப் பற்றியது)
  7. இரசாயனம் (இளமையாக்கல்)
  8. வசீகரணம் (வீரிய விருத்தி)
சிசிருதர், விசுவாசமித்திரரின் மூத்த பிள்ளையுக்கு அடுத்த பிள்ளையாவார். இவர்கள் 7 பேர் அண்ணன் தம்பிகள் ஆவர். மூத்த பிள்ளையை தவிர ஏனையோர் தேவதாசரிடம் ஆயுர்வேதம் கற்றுக் கொண்டார்கள்.

சிசிருதர், சிசிருத சம்ஹிதை என்ற நூலை எழுதினார். இவர் இரண வைத்தியத்தில் (சர்ஜரி) நிபுணர். சம்ஹிதை என்றால் மஞ்சரி என்ற பொருள். அதாவது அவருக்கு முன்னிருந்த வைத்தியர்களுடைய அபிப்பிராயங்களை எல்லாம் எடுத்து அக்காலத்துக்கு தகுந்தபடி ஒழுங்குபடுத்தி நூல் செய்வதாகும். 

No comments: